தமிழ்நாடு ஆன்மீக மண் - புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு
சென்னை: தமிழ்நாடு ஆன்மீகம் சார்ந்த மண் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது. பேராசிரியர் ஆர்.கே. முகுந்த் எழுதிய The 10 Gunas எனும் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்றிருந்தார். இதில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் அக்னிஹோத்ரி நூலை வெளியிட்டார். இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை தமிழ்நாடு ஆன்மீகம் சார்ந்த மண் என்று கூறினார்.
சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபா அரங்கில் பேராசிரியர் ஆர்.கே. முகுந்த் எழுதிய The 10 Gunas எனும் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். புத்தகத்தை விவேக் வெளியிட அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையில் அவர் பேசியதாவது, "காஷ்மீர் ஃபைல்ஸ் பார்த்துவிட்டு வெளியே வந்த எல்லோர் கண்ணிலும் கண்ணீரை காண முடிந்தது. இந்தியர்கள் எப்போதும் சிறந்தவர்கள். அவர்களின் குணங்கள் மூலம் உலகிற்கே முன்னோடியாக இருந்துள்ளனர்.கோயில்களில் சிலை வைத்து அதற்கு உயிர்கொடுக்க 48 நாட்கள் பூஜை நடத்துகின்றோம். 48 நாட்கள் என்பது நமது ஆன்மீகத்தில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை. அதனால்தான் நீங்கள் 48 நாட்கள் விரதமிருந்து, ஐயப்பனை வணங்கி அவரை நேரில் சென்று பார்க்கிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு புதிய மனிதனாக உணர்கிறீர்கள்" என்று பேசினார்.
தமிழ்நாடு ஆன்மீக மண் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில், பெரியார், அண்ணா, திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோரின் கருத்துக்கள் பரவலாக ஆதிக்கம் செலுத்தும் தமிழ்நாட்டில் மக்கள் எல்லா திருவிழாக்களையும் விமர்சையாக ஏற்று நடத்துகின்றனர். பெருந்தெய்வங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு நாட்டார் தெய்வங்களுக்கும் மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். இவர்களை ஆன்மீக என பொத்தாம் பொதுவாக நிறுவன மயமாக்கப்பட்ட வழிப்பாட்டின் பின்னால் அல்லது ஒரேயொரு மதத்தின் பின்னால் திரட்டிவிட முடியாது என்று திமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பாஜகவின் கருத்துகளை மறுத்து வருகின்றன.
Recommended Video
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்றியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தனது எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்குள் பாஜக அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications