சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக அரசு சாட்டையை கையில் எடுக்குமா.. அட்டகாசத்தில் குடிகாரர்கள்.. கதறும் குடும்பங்கள்.. கொடுமை

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் குடிமகன்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. சாலைகளில் , வீதிகளில் தாராளமாக மது அருந்துகிறார்கள். ஒவ்வொரு ஊர்களிலும் டாஸ்மாக் அமைந்துள்ள பகுதிகள் இயற்கை எழில் சூழந்த பகுதிகள் ஆகும். ஆனால் அந்த பகுதிகளில் இன்று போய் பார்த்தாலும் பிளாஸ்டிக் டம்ளர்களும், தண்ணீர் பாட்டில்களும், மது பாட்டில்களும் நிறைந்து கொடூரமாக இருக்கும்.

தமிழக அரசு கொரோனா காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை மூடி உத்தரவிட்டுள்ளது. இதனால் நியாயமாக பார்த்தால் குடிமகன்கள் பொதுவெளியில் குடிக்க கூடாது. ஆனால் பெரும்பாலான குடிமகன்கள் மதிப்பதே இல்லை.

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

கும்பல் கும்பலாக சாலைகளில் , வீடுகளின் பின்புறம் உள்ள காலியிடங்களில் உட்கார்ந்து கொண்டு மது அருந்துகிறார்கள். மதுஅருந்தும் போது பொதுவெளி என்று கூட பார்க்காமல் மிக அசிங்கமான வார்த்தைகளை பேசுகிறார்கள். இவை எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

அட்டகாசம் அதிகரிப்பு

அட்டகாசம் அதிகரிப்பு

பக்கத்து வீடுகளில் உள்ள மக்கள், ஊர்களில் வாழும் மக்கள் இந்த கொடுமைகளை தட்டிக் கேட்க பயப்படுகிறார்கள்.தட்டிக்கேட்டவர்கள் தாக்கப்படுகிறார்க்ள்.சில நேரங்களில் கொலையும் செய்யப்படுகிறார்கள். அதனால் மக்கள் குடிகாரர்களின் அட்டகாசங்கள பொருத்துக்கொண்டு ஒதுங்கி செல்கிறார்கள். காவல்துறையும் பெரிதாக கண்டிப்பது இல்லை.

3 பேர் ஒருவர் குடிக்கிறார்கள்

3 பேர் ஒருவர் குடிக்கிறார்கள்

ஒரு அரசு மதுபாட்டில்களை விற்பதோடு கடமை முடிந்துவிடுகிறது என்று தெருவில் நடப்பதை கண்டுகொள்ளாமல் விடுவது என்பது சமுதாயத்திறகு செய்யும் மிகப்பெரிய அநீதி ஆகும். தமிழகத்தில் மது அருந்துபவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து சரியான புள்ளி விவரங்கள் இல்லை. ஆனால் டாஸ்மாக் வசூலை வைத்து கணக்கிட்டு பார்த்தால் வாக்குரிமை உள்ள 3 பேரில் ஒருவர் மது அருந்துகிறார் என்ற அளவிற்கு உள்ளது.

தினசரி மது அருந்துபவர்கள்

தினசரி மது அருந்துபவர்கள்

இதில் வாரம் ஒரு நாள் அல்லது இரு நாள் அருந்துபவர்கள் , மாதத்தில் இரண்டு நாள் மது அருந்துபவர்கள். தினசரி மது அருந்துபவர்கள் என 3 வகையாக பிரிக்கலாம் .தினசரி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் ஒரு கோடியை நெருக்கி இருக்க வாய்ப்பு உள்ளது.

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

ஒவ்வொரு கிராமத்திலும் அன்றைக்கு சமையலுக்காக குடும்பங்கள் செலவு செய்த தொகையைவிட தனி ஒரு நபர் மதுவிற்காக செலவு செய்த தொகை அதிகமாக இருக்கிறது. மது அருந்திவிட்டு மனைவிகளை அடிப்பது, பிள்ளைகளை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது , பொருளாதார ரீதியாக நலிவடைந்து கடைசியில் குடும்பமே வறுமையில் சிக்கி உழல்வது என்று மோசமான நிலை காணப்படுகிறது. அதாவது மது தனி ஒருவரின் வீட்டுக்கு கேடாக முடிகிறது. கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்த குற்றவாளிகளை விசாரித்தால், பெரும்பாலோனார் அப்போது மது அருந்தி இருந்திருப்பார்கள்

மேற்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலை

அதேநேரம் இளைஞர்கள் பலர் மது அருந்துவது தான் வாழ்வில் சந்தோஷம் என்று கருதி கூட்டம் கூட்டமாக கலாச்சார சீரழிவை செய்கிறார்கள். பணம் சம்பாதிப்பதே மது அருந்ததான் என்கிற அளவிற்கு பலர் மாறி உள்ளனர். மது அருந்தும் இளைஞர்கள் அவர்கள் அளவில் முடித்தால் பரவாயில்லை. அவர்கள் நாசம் செய்து வைத்திருக்கும் இடங்கள் மிகப்பெரியது. மேற்கு தொடர்ச்சி மலைககளின் பல்வேறு பகுதிகள் மதுவின் கெட்டவாடையால் தவிக்கின்றன.

Recommended Video

    Tasmac-ஐ நம்பியிருக்க தேவையில்லை.. Tamilnadu-ன் எதிர்காலமே இனி இதுதான்.. முதல்வர் அமைத்த கமிட்டி
    போலீசுக்கு தெரியும்

    போலீசுக்கு தெரியும்

    பசுமை நிறைந்த சாலைகளும், கரடுகளும், ஆறுகளும், கடற்கரைகளும், ஓடைகளும் மதுவின் குப்பைகளை வேதனையுடன் சுமக்கின்றன. எங்கு பார்த்தாலும் பாட்டில்களும், மதுவின் எச்சங்களும், பாலிதின் குப்பைகளும் மிகுதியாக உள்ளன. இதில் கொடுமை என்னவென்றால் திறந்தவெளி பாராக ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட பகுதிகளை குடிமகன்கள் பயன்படுத்துவது போலீசாருக்கும் தெரியும். அவர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களில் வீட்டுக்கு செல்வார் என்பதும் தெரியும். ஆனால் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்தது இல்லை.

    தமிழகத்தில் ஆக்சன் தேவை

    தமிழகத்தில் ஆக்சன் தேவை

    கேரளாவில் திறந்தவெளியில் மது அருந்துவது என்பது மிகமிக சவாலானது. மது அருந்தினால் ஸ்பாட்டிலேயே கடுமையான அபராதம் அல்லது சிறை செல்ல நேரிடும். ஆனால் இந்த சட்டம் தமிழகத்தில் மட்டும் நடைமுறையில் இருக்கிறதா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான். திறந்தவெளியில் மது அருந்துபவர்களிடம் கடுமையாக கண்டிப்பு காட்டினால்,மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க தினமும் கடுமையாக கண்டிப்பு காட்டினால் தான் நிலைமை கொஞ்சமாவது மாறும். இல்லாவிட்டால் எல்லை மீறி செல்லும் குடிமகன்களின் அட்டாகசத்தை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டியது வரும். கடுமையாக மாறுங்கள் என அரசு ஒரே உத்தரவு போட்டால் போதும்.. ஒரே நாளில் எல்லாம் மாறிவிடும்.

    English summary
    Will the Tamil Nadu government crack down on drunkards crossing the border drinking alcohol on the roads?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X