1100 செலவு செய்து ஆறு நாள் பயணம்.. விடியல் பேருந்தில் கன்னியாகுமரி டூ சென்னை.. விமர்சிக்கும பாஜக
சென்னை: வேலூரை சார்ந்த கலைவாணி மற்றும் ஆற்காட்டை சேர்ந்த பானுமதி ஆகிய 2 பெண்கள் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை 6 நாட்களாக மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தார்கள். இதற்கு ஆதரவாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எனினும் இதனை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.
மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம் செய்து தமிழ்நாட்டையே சுற்றிவர முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இரண்டு பெண்கள் பயணித்துள்ளனர். ஆனால் அப்படி பயணிக்க குறைந்தது ஆறு நாட்களாகவது ஆகும் என்பதாக அவர்களின் பயணம் காட்டுகிறது. நகரப்பேருந்துகள் என்பது அருகருகே உள்ள இருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து ஆகும்.

சென்னை டூ விழுப்புரம்
உதாரணமாக சென்னையில் இருந்து ஒருவர் விழுப்புரத்திற்கு கட்டணமே இல்லாமல் செல்ல வேண்டும் என்றால் நேரடியாக ஒரே பேருந்தில் சென்றுவிட முடியாது. அதற்கு சென்னையில் அவர் எங்கு வசித்தாலும், விடியல் பேருந்தில் ஏறி தாம்பரம் வர வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கம் வர வேண்டும் அல்லது அங்கிருந்தே செங்கல்பட்டுக்கு செல்லும் விடியல் பஸ்ஸில் ஏற வேண்டும். அதன்பிறகு செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் அல்லது மேல்மருவத்தூர் செல்ல வேண்டும்.
பயணம் எப்படி
அதன்பிறகு திண்டிவனம் செல்ல தனிப்பேருந்து பிடிக்க வேண்டும். இறுதியாக திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் நகரப் பேருந்தில் கட்டணமின்றி செல்ல முடியும். ஒரு நாள் முழுக்க பயணம் செய்தால் விழுப்புரம் சென்றுவிட முடியும். இப்படித்தான் வேலூரை சார்ந்த கலைவாணி மற்றும் ஆற்காட்டை சேர்ந்த பானுமதி ஆகிய 2 பெண்கள் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை 6 நாட்களாக மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம் வந்துள்ளார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பயணித்து வந்ததாக இவர்கள் கூறினார்கள். இதனை திமுகவினர் வரவேற்றுள்ளனர். அதேநேரம் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
பாஜக விமர்சனம்
பாஜக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், கன்னியாகுமரி டு சென்னை நார்மலா டிக்கெட் எடுத்தாலே 500 ரூபாய் மட்டும் தான், இரவு பஸ் ஏறினால் காலை சென்னையில் இறங்கி விடலாம், ஆறு நாட்கள் சாப்பாடு செலவு, டாய்லெட் போகும் செலவு, கால விரயம் நேர விரயம், ஒரு நாள் சாப்பாடு செலவு 150ரூபாய் என்றாலுமே, 900 ரூபாய் ஆறு நாட்கள் ஆகிவிடும்.
சொகுசு பேருந்தில் வரலாம்
ஒருநாள் டீ செலவு ₹10 என்றாலும் ஆறு நாட்களுக்கு 60 ரூபாய். பெரும்பாலும் கட்டண கழிப்பிடம் தான் இருக்கும், ஒரு நாளைக்கு அது ஒரு பத்து ரூபாய் மொத்தம் 60 ரூபாய், ஆறு நாட்கள் எப்படியும் குளிக்காமல் இருக்க முடியாது, அதுவும் கட்டணம் தான் அதற்கு ஒரு அறுபது ரூபாய், கிட்டத்தட்ட மொத்தம் 1100 ரூபாய் வருகிறது, இந்த கட்டணத்தில் சொகுசு பேருந்தில் உறங்கிக் கொண்டே, சென்னைக்கு 12 மணி நேரத்தில் சென்றிருக்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
Gold Price Today: சட்டென சரிந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே இன்ப அதிர்ச்சி! சென்னையில் ரேட் என்ன? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
அரசு ஊழியர்களின் முதல் தேர்வு தேனி, கன்னியாகுமரி.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் விரும்புவது ஏன் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications