Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உளவு எக்ஸ்பர்ட்".. நேரம் பார்த்து தமிழ்நாட்டிற்கு ஆளுனராக அனுப்பப்பட்ட ஆர்என் ரவி.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஆர்என் ரவி புலனாய்வு துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். இவரின் வருகை தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    நேரம் பார்த்து தமிழ்நாட்டிற்கு ஆளுனராக அனுப்பப்பட்ட ஆர்என் ரவி..

    தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது..

    இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு ஆர்என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.. ஏன் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்!

    பல்வேறு பணிகள்

    பல்வேறு பணிகள்

    தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஆர்என் ரவி கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். அங்கு பல்வேறு மாவட்ட பொறுப்புகளை வகித்து வந்தார். 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். பீகாரை சேர்ந்தவர் என்றாலும் கேரளாவில் இருந்த காரணத்தால் தென்னிந்திய அரசியல் இவருக்கு அத்துப்படி. இவரின் தொடர் பணிகள் காரணமாக டெல்லியில் கவனம் பெற்றவர் அப்படியே சிபிஐக்கு சென்றார். சிபிஐ மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு முக்கியமான விசாரணைகளை நடத்தி கவனம் பெற்றார்.

     மாஃபியாக்களை அடக்கினார்

    மாஃபியாக்களை அடக்கினார்

    இதன் காரணமாகவே மத்திய அரசால் கவனிக்கப்பட்ட ஆர்என் ரவி புலனாய்வு பிரிவுக்கு மாற்றல் ஆனார். அங்கிருந்துதான் அவரின் உண்மையான இன்னிங்ஸ் தொடங்கியது. இந்த சமயத்தில்தான் தன்னை மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி என்று ஆர்என் ரவி வெளிப்படுத்தினார். அப்போது வடமாநிலங்களில் பல இடங்களில் சுரங்க கும்பல்கள் அடாவடி இருந்தது. சுரங்க மாஃபியாக்கள் அதிக அளவில் இருந்தன. இதை வட மாநிலங்களில் அடக்குவதில் முக்கியமான பங்கு வகித்தார் ஆர்என் ரவி.

    உளவு அதிகாரி

    உளவு அதிகாரி

    புலனாய்வு அதிகாரியாக இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ஆபரேஷன்களை காங்கிரஸ் ஆட்சியில் கவனித்துக் கொண்டார். முக்கியமாக காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத குழுக்களின் இருப்பிடங்கள் குறித்து தொடர்ந்து உளவு தகவல்களை கொடுத்து வந்தார். இந்த சமயத்தில்தான் இவருக்கும் அஜித் தோவலுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. புலனாய்வு என்ற ஒற்றை புள்ளியில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 2012ல் இவர் ஓய்விற்கு பின் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருந்தார். பல்வேறு செய்தி நிறுவனங்களில் கட்டுரைகள் எழுதினார்.

    பிரதமர் அலுவலகம்

    பிரதமர் அலுவலகம்

    2014ல்தான் பாஜக ஆட்சியின் போது மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தின் புலனாய்வு கூட்டுக் கமிட்டியின் தலைவராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டார். இதில் அஜித் தோவலுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். காஷ்மீரில் கடந்த 7 வருடங்களில் நடந்த தொடர் என்கவுண்டர், எங்கு தீவிரவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டது, சர்ஜிக்கல் அட்டாக்ஸ், மாவோயிஸ்ட் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்களில் புலனாய்வு தகவல்களை சேகரித்ததில் இவரின் பங்கு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

    முக்கிய பொறுப்பு

    முக்கிய பொறுப்பு

    பிரதமர் அலுவலகத்தின் குட்புக்கில் இருந்தவருக்கு நாகாலாந்தில் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சி குழுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் தொடக்கத்தில் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டாலும் போக போக, ஆளுநராக இவரின் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காத காரணத்தால் தற்போது தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததற்கு வேறு சில காரணங்களுக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.

    சீனா இலங்கை

    சீனா இலங்கை

    அதன்படி இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இலங்கையில் தொடர்ந்து சீனாவின் கை நீண்டு வருகிறது. அங்கு சீன தனி ஆட்சி அதிகாரம் கொண்ட பகுதிகளை நிர்வகித்து வருகிறது. அதோடு கேரளா எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக மாவோயிஸ்டுகள் இருப்பு அதிகரிக்கிறது. இதெல்லாம் போக கேரளாவில் இருந்து சிலர் ஐஎஸ் படையில் சேர்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வரும் நிலையில்தான், முக்கியமான நேரத்தில் புலனாய்வு அதிகாரியான ரவி தமிழ்நாடு வந்துள்ளார். தென்னிந்தியாவில் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. கர்நாடகா தவிர வேறு எங்கும் பாஜக ஆட்சி இல்லை. இப்படிப்பட்ட நிலையில் பாதுகாப்பு ரீதியாக முக்கியமான நபர் இங்கே இருக்க வேண்டும். பாதுகாப்பு ரீதியாக இப்படி ஒருவர் தேவை என்பதாலேயே ரவி தமிழ்நாடு அனுப்பி உள்ளனர்.

    கரைத்துக் குடித்தவர்

    கரைத்துக் குடித்தவர்

    தென்னிந்திய அரசியல் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அதோடு புலனாய்வு துறையில் வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பதால் இவர் தமிழ்நாடு வந்துள்ளார். தென்னிந்திய அரசியல் குறித்து கரைத்து குடித்தவர் என்பதால் இவரின் வருகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் கண்டிப்பான நபர் என்பதால் இவருக்கும் திமுக அரசுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பன்வாரிலால் புரோஹித் போல இவர் தமிழ்நாடு திமுக அரசோடு நட்பாக செல்வாரா அல்லது கடும் நிலைப்பாடுகளை எடுப்பாரா என்பது போக போகத்தான் தெரியும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+