தி காஷ்மீர் பைல்ஸ் - பண்டிட்களுக்கு துரோகம் செய்தது யார்?- மாறி மாறி குற்றம்சாட்டும் காங்கிரஸ்-பாஜக
சென்னை: காஷ்மீரில் நடந்த பிரச்சனைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. இந்த திரைப்படத்தால் அரசியல் களத்தில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் எதிரொலியாக காஷ்மீரில் இந்து பண்டிட்கள் வெளியேறியதற்கு யார் காரணம் என காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது.
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் கடந்த 11ம் தேதி அன்று தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெளியானது.

காஷ்மீர் பைல்ஸ்
90களின் முற்பகுதியில், காஷ்மீரில் வசித்து வந்த இந்து பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்களை வெளியேற்ற நடந்த திட்டங்கள் என ஒரு உண்மை நேர்காணலை வைத்து திரைப்படம் இயக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் வெளியானதும் பாஜக தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது. பிரதமர் மோடி படக்குழுவை அழைத்துப் பாராட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்துக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக
காஷ்மீர் பண்டிட் விஷயத்தில் பாஜக பொய் சொல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ட்விட்டரில், காஷ்மீர் பைல்ஸ் உண்மை என்ற தலைப்பில் காஷ்மீரில் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து பதிவேற்றி வருகிறது கேரள காங்கிரஸ்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் பாஜக ஆதரவு பெற்ற பிரதமர் பதவியில் இருந்த வி.பி.சிங் காலகட்டத்தில் நடந்தது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஆளுநர்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, அங்கிருந்த பண்டிட்களை ஜம்முவுக்கு செல்லுமாறு அப்போதைய ஆளுநர் ஜக்மோகன் தெரிவித்தார். ஜக்மோகன் ஒரு ஆர்.எஸ்.எஸ் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தகவலில், அதே காலகட்டத்தில் ராமர் கோவில் பிரச்னையை எழுப்பி இந்து மற்றும் முஸ்லீம்கள் இடையே பகையை தூண்டி விட்டு, தேர்தலில் ஆதாயம் தேடியது பாஜக. இந்தியா பிரிவினையின்போது 1948-ம் ஆண்டில் நடைபெற்ற மோதலில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாகவும், ஆனால் பண்டிட்கள் பழிவாங்கப்படவில்லை என்றும் கேரள காங்கிரஸ் கூறியுள்ளது.

பண்டிட்கள்
காஷ்மீர் பண்டிட்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் பாஜக அவர்கள் மீள்குடியேற்றம் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 15000 பண்டிட்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது, காஷ்மீர் பண்டிட் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை காங்கிரஸ் அரசு வழங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது. பாஜக ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகே பண்டிட்கள் மீண்டும் காஷ்மீர் திரும்பியதாக கூறியுள்ளது. இதனால் காஷ்மீர் பண்டிட்கள் விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வருகிறது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications