சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக் கடல் டூ சென்னை! மாண்டஸ் புயல் கடந்து செல்லப் போகும் பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கா?

Google Oneindia Tamil News

சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் படிப்படியாக கரையைக் கடக்கும் நிலையில், உருவானதில் இருந்து புயலாக மாறி அந்த புயல் எங்கெங்கு பயணித்தது என்பது குறித்து சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 6ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் தாழ்வு மண்டலமாக மாறியது.

அப்போது வங்க கடலில் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு பகுதியில் 770 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்கால் சென்னையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 970 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

கரையை நெருங்கும் மாண்டஸ்! இன்னும் கொஞ்சம் நேரம் தான்! ஆனால்.. எதிர்பார்த்த மழை இல்லையே! என்ன காரணம்?கரையை நெருங்கும் மாண்டஸ்! இன்னும் கொஞ்சம் நேரம் தான்! ஆனால்.. எதிர்பார்த்த மழை இல்லையே! என்ன காரணம்?

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

தொடர்ந்து இந்த தாழ்வு மண்டலம் ஆனது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் மாலை சூறாவளி புயலாக மாறும் எனவும் அதனைத் தொடர்ந்து மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அதிதீவிர புயல்

அதிதீவிர புயல்

தொடர்ந்து சென்னையில் இருந்து சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த மான்டஸ் புயல் ஆனது அதிதீவிர புயலாக உருமாறியது. இதனால் நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த எட்டாம் தேதி மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வடமேற்கு திசையில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றது.

ஆரம்பப் பகுதி

ஆரம்பப் பகுதி

அடுத்தடுத்து அந்த புயல் வலுவிழந்து சூறாவளி புயலாக மாறியது. 9ஆம் தேதி அதிகாலை சூறாவளி புயலாக மாண்டஸ் புயல் வலுவிழந்த நிலையில் மகாபலிபுரம் அருகே 65 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி பயணித்து நள்ளிரவில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும் என அறிவிக்கப்பட்டது. கணித்தது போலவே மாலை நேரங்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீச தொடங்கியது இரவு 7 மணியிலிருந்து புயல் தொடர்பான சமிக்கைகள் தெரிய ஆரம்பித்த நிலையில் ஒன்பது மணிவாக்கில் புயலின் ஆரம்பப் பகுதி கரையை கடக்க தொடங்கியது.

பலத்த காற்று

பலத்த காற்று

இதனையடுத்து சென்னை மகாபலிபுரம் இடையே பலத்த காற்று வீசத் தொடங்கியது. பல பகுதிகளில் பலத்த மழையுடன் மரங்கள் சாய்ந்து விழுந்தன. தொடர்ந்து சுமார் சுமார் 2 மணியளவில் புயலில் மையப்பகுதி கரையை கடந்தது. இதற்கு அடுத்ததாக புயலின் பின்பகுதி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கரையை கடக்கும் எனவும் அதிகாலை வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது மகாபலிபுரத்தில் கரையை கடந்த மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில், அடுத்த முழுவதுமாக வலுவிழக்கவுள்ளது.

அடுத்து எங்கே?

அடுத்து எங்கே?

கரையை கடந்தபின் மாண்டஸ் புயல் முழுமையாக கரையைக் கடந்த பின் தாழ்வு நிலையானது கர்நாடகா பெங்களூரு வரை பயணிக்கும். ஆனால் செல்லும் வழியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் கர்நாடகாவில் மழை கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புயலின் மையப் பகுதி கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேரங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

English summary
As Cyclone Mandous, which formed in the Southeast Bay of Bengal, is gradually making landfall, let's take a closer look at where the storm has traveled since its formation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X