சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீள்கிறது சென்னை.. 2வது அலையில் குறைகிறது தொற்று.. ஆய்வில் வெளியான நிம்மதி தகவல்..!

சென்னையில் குறைந்து வருகிறது தொற்று பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அளவுக்கு அதிகமாக சென்னைவாசிகளுக்கு பீதியை தந்தது இந்த இரண்டாவது அலைதான்.. அந்த வகையில், கொரோனா கேஸ்கள், முதல் அலையை காட்டிலும் 2ம் அலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது... இது சென்னை மக்களுக்கு நிம்மதியை தந்துவருகிறது.

எப்போது கொரோனா வைரஸ் தாக்கம் வந்தாலும், தமிழகத்திலேயே சென்னையில்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்... சென்னையில் தொற்று குறைந்தாலே, பாதி தமிழகம் சேஃப் ஆகிவிடும்.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

முதல்வர் ஸ்டாலின், பதவியேற்றது முதலே சென்னையில் தொற்று குறைய பெரிதும் நடவடிக்கை எடுத்து வந்தார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் துரிதமான வேகம், செயல்பாடு இதற்கு முக்கிய உறுதுணையாக இருந்தன.

 தளர்வுகள்

தளர்வுகள்

லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு, சென்னையில் தொற்று குறைய துவங்கியது.. ஆனால், எத்னையோ பகுதிகளில் தொற்று குறைந்தாலும், ஒருசில குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டும் பாதிப்பு இருந்து கொண்டே இருந்தது.. குறிப்பாக ராயபுரம் போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்..

 நிம்மதி

நிம்மதி

இதன்விளைவு, சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.. குறிப்பாக முதல் அலையை காட்டிலும் 2ம் அலையில் வெகுவாக குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.... இதுதான் தற்போது சென்னைவாசிகளுக்கு ஓரளவு நிம்மதியை தந்து வருகிறது..

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த 2வது அலையில்தான் மக்கள் பெருமளவில் உயிரிழந்தனர்.. எனவே, இந்த ஏப்ரல் மாதம் 2வது அலை தொடங்கியதுமே, மே மாதம் 24ம் தேதி முதல் ஜுன் மாதம் 7ம் தேதி வரை முழு லாக்டவுன் போடப்பட்டது.. இதற்கு பிறகு தமிழ்நாடு அரசு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்தாலும் சில முக்கியமான விஷயங்களில் கவனமாகவே கையாண்டது.. அதன்காரணமாகவே தினசரி பாதிப்பும் இப்போது குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

அதாவது முதல் அலையில் தினமும் 134 என்றே பதிவாகி கொண்டிருந்தது.. இதுதான் படிப்படியாக குறைந்து சென்னையில் 126 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. கடந்த ஜூலை 22-ம்தேதி 133, ஜூலை 23-ம்தேதி - 130, ஜூலை 24-ம்தேதி 127, ஜூலை 25-ம்தேதி 126 என்று கேஸ்கள் குறைந்துள்ளன.. இது அடுத்தடுத்து நாட்களில் மேலும் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதனால் நீண்ட நாட்கள் கழித்து சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

English summary
The Second wave will decrease greatly in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X