பொண்ணு கூடயே இப்படியா? புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்! எல்லை மீறும் இலக்கியா! எதிராக கிளம்பும் புகார்
சென்னை : சமூக வலைதளங்களில் ஆபாசமாக நடனமாடி இரட்டை அர்த்த வசனங்கள் பேசிய திருச்சி சாதனாவுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் வீடியோக்கள் மூலம் ஆபாசத்தின் உச்சிக்கே சென்று வீடியோக்கள் வெளியிட்டுவரும் டிக்டாக் இலக்கியாவை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் அவரது வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
டிக் டாக் செயலில் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடி பலர் பிரபலமாகி வந்தனர். நடனம், நடிப்பு,காமெடி என தங்களுக்கு தெரிந்த மொத்த வித்தைகளையும் காட்டி, பிரபலமாகத் தொடங்கினர். கொரோனோவோடு டிக்டாக்குக்கும் தடை வர சிலர் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறியது கூட நினைவிருக்கலாம்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய பலர் டிக் டாக் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை வசப்படுத்தி கொண்டுள்ளனர். அந்த வகையில் ராஜ்பிரியன், ஜிபி முத்து உள்ளிட்டோரை சொல்லலாம்.

ஆபாச வீடியோக்கள்
ஆனால் அதற்கும் மேல என்பது சொல்வது போல லைக்ஸ்க்காவும் புகழுக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் உச்சபட்ச ஆபாசம் காட்டி இரட்டை அர்த்த வசனங்கள் பேசி எல்லை மீறிய சம்பவங்களும் டிக் டாக் முடக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்ட பலர் மிகவும் ஆபாசமாக பேசி நிலையில் ரவுடி பேபி சூர்யா இருமுறை கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக திருச்சி சாதனாவுக்கும் தற்போது பேஸ்புக்கில் இரட்டை அர்த்த வசனங்களை பேசியதாகவும் ஆபாச சைகைகள் செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உச்சபட்ச கவர்ச்சி
அந்த வகையில், கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தூக்கலான கவர்ச்சியை டிக்டாக்கில் கொட்டி கொட்டி, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாக்கினார் டிக் டாக் பிரபலம் இலக்கியா. டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றும் ஃபேஸ்புக் ரீலில் வீடியோக்கள் வெளியிட்டுவரும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக லைக்ஸ் கிடைக்க பார்க்கும் ஆண்களே முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சி உடை அணிந்தபடி மது பாட்டில்களுடனும், சிகரெட் பிடித்தபடி , கேட்கவே கூசும் இரட்டை அர்த்த வசனங்களை பேசி அதற்கேற்றார் போல் நடித்து காட்டுவதில் இலக்கியா உலக பேமஸ்.

வலைதளங்களில் மோசடி
ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் இவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் சிறிது காலம் ஓய்வில் இருந்து அவர் பின் வேறு பெண்ணுடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல் வெளியிட்டு வந்தார். இதுக்கு அதுவே பரவாயில்லை என்பது போல இருவரும் பண்ணிய அட்ராசிட்டிகளை கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்கள் பலரும் புகார்களை அளித்தனர். மேலும் தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பினார் இலக்கிய அதில் தன் பெயரை வைத்து பண மோசடி நடப்பதாக கூறி இருந்தார்.

மீண்டும் போலி கணக்குகள்
இந்த நிலையில் தற்போது இலக்கியா இலக்கியா, இலக்கியா ஆபீஷியல், இலக்கியா ஹணி, இலக்கியா ஏஞ்சல் உள்ளிட்ட பல பெயர்களில் சமூக வலைத்தள கணக்குகள் துவங்கப்பட்டு அதில் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவதால் இலக்கியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை அழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்கள் கோரிக்கை
தற்போது ஆன்லைன் கிளாஸ் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள், மாணவ மாணவிகள் கையில் செல்போன் அதிக நேரம் தவழும் நிலை உள்ளது. இணைய தளங்களில் உலாவும் போது அடிக்கடி ஆபாச இளைய லிங்குகள், இன்வைட்கள், வீடியோக்கள், விளம்பரங்கள் என வருகிறது. இதனால் பாதுகாப்பான இணைய சேவையை அளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இலக்கியா போன்ற நபர்களின் அத்துமீறலால் அதிலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமாயிற்று என்றே கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications