Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநில உரிமைகளை பறிப்பதா? பாஜக அரசை கண்டித்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறைக்கூவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நவம்பர் 1ஆம் தேதி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மொழி உரிமை, மாநில உரிமை மீது அக்கறையுள்ள அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.

பாஜக அரசை கண்டித்து ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்பதை திருமாவளவன் விளக்கியுள்ளார். அதன் விவரம் வருமாறு;

 பக்குவம் இல்லை

பக்குவம் இல்லை

ஒன்றிய அரசின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் மொழிவழி தேசியத்தையோ மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிர்ச்சியான சனநாயகப் போக்குகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதைத் தொடர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன்படியே தற்போது பாஜக அரசும் மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

நவம்பர் 1

நவம்பர் 1

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர்-01 ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நடைபெறுகிறது.

தமிழக நலன்

தமிழக நலன்

அந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழ்நாடு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாநிலங்களின் நிதித் தற்சார்பை சீர்குலைக்கும் விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியையும் தானே அபகரித்துக் கொள்கிறது. ஜிஎஸ்டி சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியையும் உரிய காலத்தில் அளிப்பதில்லை. இதனால், மாநில அரசுகள் தமது மக்களின் தேவைக்கேற்ற திட்டங்களை அறிவிக்க முடியவில்லை.

கல்வியை சீரழிக்கும் திட்டங்கள்

கல்வியை சீரழிக்கும் திட்டங்கள்

பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் தேவையற்ற தலையீடுகளைச் செய்து தமிழ்நாட்டினுடைய கல்வி வளர்ச்சியைச் சீரழிக்க முனைகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் மூலமாக அத்து மீறுகிறது. தனது பொறுப்பின் அடிப்படையிலேயே ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பதை மாற்றும்வகையில், புதிதாக தமிழ்நாடு அரசு இயற்றியிருக்கும் சட்ட மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் முடக்கி வைத்திருக்கிறார்.

எல்லையில் கோட்டை விட்டது

எல்லையில் கோட்டை விட்டது

அடுத்து, இந்திய நாட்டை அண்டை நாடுகளின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு, நமது நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை- ஆக்கிரமிப்பை வேடிக்கைப் பார்க்கிறது. ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பளவு கொண்ட நமது நாட்டின் வடக்கே எல்லையோரப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்திருப்பது தெரிந்தும் பாஜக அரசு கையாலாகாத வகையில் செயலிழந்து நிற்கிறது.

 திருமா அறைகூவல்

திருமா அறைகூவல்

பாஜக அரசின் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து, நவம்பர் 01ஆம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+