அடிமைப்படுத்தும் எண்ணம் இல்லை... நாற்காலியின் மீது நடந்தது பற்றி திருமாவளவன் விளக்கம்
டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன்; நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்; அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருந்து டெல்லி புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது வீட்டை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது கட்சித் தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவரை ஏற்றி நடக்க வைத்து பின்னர் காருக்குள் அனுப்பினார். இந்த வீடியோவை அக்காட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டிருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மழை தண்ணீரில் கூட இறங்கி நடக்க தயங்குபவர்கள் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் என்றும், அவர் இருக்கையில் ஏறி நிற்க தொண்டர்கள் அவரை தண்ணீரில் நின்றபடி தாங்கி செல்கின்றனர். இது ஒருவிதமான எதேச்சதிகாரம், இதுதான் சமூக நீதியா என்றெல்லாம் அவரை விமர்சித்தனர்.
தற்போது இது விவாத பொருளாக மாறியுள்ளது.

நடந்தது என்ன
இந்நிலையில் இது குறித்து வன்னி அரசு விளக்கம் அளித்திருந்தார். தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் என்ற பிரச்சினை இருப்பதாலும், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒரு தலைவரால் எப்படி தண்ணீரில் நனைந்தபடி எப்படி செல்ல முடியும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இருக்கையில் நடந்து சென்ற விவகாரம் குறித்து விளக்கமளித்திருந்தார்.

நாற்காலி மீது ஏறியது ஏன்?
இந்த நிலையில் தான் இருக்கை மீது ஏறிச்சென்றது ஏன் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன் என்று கூறியுள்ளார்.

என் வீடு அல்ல
நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள், அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை என்று கூறியுள்ள திருமாவளவன்,
நான் தங்கியுள்ளது என் வீடு அல்ல; அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மழையின்போது மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்; அந்த சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

குற்றம் சாட்ட வேண்டாம்
அடிமைப்படுத்துதல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது என் மீது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும்; பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications