சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் சேகர் வீட்டில்.. அரிய வகை மலைப்பாம்பு.. ஆடிப்போன வனத்துறை
சென்னை: சென்னை திருவெற்றியூர் விம்கோ நகர் பகுதிக்கு மிக அருகிலேயே பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது. இங்கு அவ்வப்போது மலைப்பாம்புகள் நீச்சலடித்து கால்வாய்கள் மற்றும் சாக்கடை வடிகால்கள் வருவது வழக்கம். அப்படி வரும்போது நிலப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் மட்டம் உயரும்போது, இவை அடித்து வரப்படுவது உண்டு. அப்படித்தான் விம்கோ நகரில் மலைப்பாம்பு குட்டி ஒன்று அடித்து வரப்பட்டது. அதனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
சென்னையை பொறுத்தவரை மலைப்பாம்புகளுக்குப் பிடித்தமான உணவுகள் தாராளமாகக் கிடைத்து வருகிறது. எலிகள் மற்றும் பெருச்சாளிகள் பாதாள சாக்கடை மறறும் குப்பைகள் தேங்கும் இடங்களில் அதிகம் இருக்கும். எனவே அவற்றை வேட்டையாடப் பாம்புகள் அவ்வப்போது வருகின்றன. அத்துடன் கோழிகள், ஆட்டுக்குட்டிகள் மற்றும் தெரு நாய்க்குட்டிகள் மலைப்பாம்புகளுக்கு எளிதான இரையாகின்றன.

விம்கோ நகர் பகுதியில் உள்ள பழைய தொழிற்சாலை வளாகங்கள், அடர்ந்த புதர்கள் மண்டிக்கிடக்கும் காலி மனைகள் போன்றவை மலைப்பாம்புகள் தங்குவதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன. எனவே அவ்வப்போது மலைப்பாம்புகள் வந்து செல்கினற்ன,
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சேகர் என்பவரது வீட்டுக்குள் குட்டி மலைப்பாம்பு ஒன்று வந்து விட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்வதற்குள் அங்கிருந்த பாதாள சாக்கடை குழாய்க்குள் ஓடி மறைந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், சேகர் வீட்டை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாம்பு கழிவுநீர் செல்லும் பாதை வழியாக உள்ளே சென்று மறைந்து இருப்பதை கண்டுபிடித்தனர். சிறிது நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள், லாவகமாகவும் பாதுகாப்பாகவும் அந்த குட்டி மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "இது மலைப் பிரதேசங்களில் கற்களுக்கிடையே காணப்படும் அரிய வகை கருப்பு வால் மலைப்பாம்பு" என்றார்கள். பக்கிங்காம் கல்வாயில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications