”இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க எண்ணுபவர்கள் நாட்டைத் துண்டாட துடிக்கிறார்கள்” - கனிமொழி அதிரடி!
சென்னை: இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க எண்ணுபவர்கள்தான், நாட்டை துண்டாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயன்படுத்திய உடன்பிறப்பே என்ற சொல்லை போல் வேறு யாரும் அனைவரையும் இணைக்கக் கூடிய ஒரு சொல்லை பயன்படுத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை. அதனால்தான் கருணாநிதி, யார் யாரையெல்லாம் பார்க்க தவறியதோ, அவர்களை பாதுகாக்கக் கூடிய அரணாக இருந்தார்.

தமிழக அரசு
சமூகத்தில் வாக்கு வங்கிகளுக்கு எதிரான கேள்விகளை அதிகமாக கருணாநிதி எழுப்பியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக ஒரு துறையை, தன் நேரடி பார்வையின் கீழ் வைத்துக்கொண்டனர். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளின் உரிமைகளுக்காக அதிக திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

பாஜக மீது விமர்சனம்
தொடர்ந்து, இந்த நாடு இந்துத்துவ நாடு என்ற கருத்தை உருவாக்கி வருகிறார்கள். இங்கே பெரும்பாலானோர் இந்துக்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வீடுகளிலும், கிராமத்திலும், மாவட்டத்திலும் கடவுளை வழிபடும் முறை மாற்றமடையும். திருமணங்களிலேயே பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது.

இந்து மதம்
ஆனால் இவையனைத்தையும் மதிக்காமல், நாங்கள் சொல்வது மட்டுமே சரி. இதுதான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வடிவம் என்று இந்துக்களுடையே உரிமைகளுக்கு எதிராக இருக்கக் கூடியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்து மதத்தை கையில் எடுத்துக்கொண்டு, தாங்களே பாதுகாவலர்கள் தான் இன்று இந்து மதத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து சாம்ராஜ்யம்
சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று பெரியார், கருணாநிதி ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நாட்டையே துண்டாட துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு
அவர்களுக்கு எல்லோரும் இந்தி பேசினால் தான் இந்தியர்கள். ஒவ்வொரு முறையும், இந்தி படித்தால் இந்தியர்கள், இந்தி பேசினால் தான் இந்தியர்கள் என்று மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்தி தெரிந்தால் தான் வாழ முடியும் என்ற நிலையை உருவாக்கிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது திராவிட ஆட்சி என்று தெரிவித்தார்.
-
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications