சென்னையில் மழை.. தேங்கிய மழைநீர்.. மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு.. மக்களே உஷார்
சென்னை: கடந்த மாதம் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முழுமையாக தீராத நிலையில் இன்று திடீரென கொட்டிய கனமழை சென்னை நகரை புரட்டி போட்டுள்ளது. சென்னை நகர், புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியுள்ளது.
இதனால் சென்னை முழுவதும் மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

13 வயது சிறுவன்
சென்னையில் விடாமல் பேய்மழை கொட்டி வரும் நிலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் அவனது வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மூதாட்டி உயிரிழப்பு
ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலையில் வசித்து வந்தவர் மூதாட்டி தமிழரசி. பலத்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அதில் நடந்து சென்ற மூதாட்டி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மீனா(45). புளியந்தோப்பில் உள்ள அம்மையம்மாள் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வடமாநில பெண்
அந்த பகுதியில் மழை சற்று ஓய்ந்த நிலையில் கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேவந்துள்ளார் அப்போது வீட்டின் இரும்பு கேட்டை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
உடனே மயக்கமடைந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்
சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மின்சார தாக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. மழைநீரில் மின்வயர் கிடப்பது தெரியாது என்பதால் மக்கள் மக்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் மழைநீரில் விளையாடுவதை தடுக்க வேண்டும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications