வேகமெடுக்கும் ஓமிக்ரான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. மருத்துவமனையில் திடீர் ஆய்வு!
சென்னை: இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் ஏற்கனவே காலடி எடுத்து வைத்து விட்டது. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையம்
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 136 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

களத்தில் இறங்கிய ஸ்டாலின்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்
ஓமிக்ரான் சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பி.எம் கேர்ஸ் நிதியில் அமைக்கப்ட்டுள்ள தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் என மருத்துவமனையின் பல இடங்களில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
Recommended Video

வார் ரூமிலும் ஆய்வு
இதேபோல் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்ட்டுள்ள கொரோனா தடுப்புக்கான வார் ரூமிலும் (கொரோனா தடுப்பு கட்டளை மையம்) முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ், ஓமிக்ரான் குறித்த சந்தேகம் எழுப்பும் பொதுமக்களுக்கு இங்கு முறையாக பதில் தரப்படுகிறதா? என்று வார் ரூமில் இருக்கும் பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications