புதிய டிஜிபி... திண்டுக்கல் எஸ்.பி.யாக சைலேந்திரபாபு நடத்திய முதல் என்கவுண்ட்டர் 'நக்சலைட் நாகராஜன்'
சென்னை: தமிழக காவல்துறை தலைவராக (டி.ஜி.பி.) சி. சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்க உள்ளார். 1990களின் தொடக்கத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய போது, பதுங்கி இருந்த நக்சலைட் நாகராஜன் என்ற வெடிகுண்டு நாகராஜனை சுட்டு வீழ்த்தியதுதான் டி.ஜி.பி. சி. சைலேந்திரபாபுவின் முதல் என்கவுண்ட்டர்.
Recommended Video
தமிழக காவல்துறை தலைவரான டி.ஜி.பி. திரிபாதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு இன்று பதவியேற்க உள்ளார்.

திண்டுக்கல் எஸ்.பி.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பிறந்த சைலேந்திரபாபு, 1989-ல் கோபிசெட்டிபாளையத்தில் ஏ.எஸ்.பி.யாக தமிழக காவல்துறை பணியில் இணைந்தார். பின்னர் 1992-ல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

திண்டுக்கல் மாவட்ட நக்சலைட்டுகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் சைலேந்திரபாபு எஸ்.பி.யாக பணியாற்றிய போது நக்சலைட் நாகராஜன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்தான் அவரது முதல் என்கவுண்ட்டர். திண்டுக்கல் மாவட்டத்தில் 1960, 1970களில்தான் அன்று தீ. கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப்பட்ட நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்தது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் விவசாய கூலிகளாக நக்சலைட்டுகள் ஊடுருவி இருந்தனர்.

பதுங்கி இருந்த நக்சலைட் நாகராஜன்
பின்னர் காலப்போக்கில் நக்சலைட் நடமாட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டும் அவ்வப்போது இருந்து வருகிறது. இந்த பின்னணியில் திண்டுக்கல்- பழைய கரூர் சாலையில் உள்ள குளத்தூர் என்ற கிராமத்தில் நக்சலைட் நாகராஜன் என்ற வெடிகுண்டு நாகராஜன் பதுங்கி இருப்பதாக எஸ்.பி.யாக சைலேந்திரபாபுவுக்கு தகவல் கிடைத்தது.

நாகராஜன் என்கவுண்ட்டர்
இதனையடுத்து நாகராஜனை பிடிக்க குளத்தூருக்கு தனி ஒருவராகவே சென்றார் சைலேந்திரபாபு. நாகராஜன் பதுங்கி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார் சைலேந்திரபாபு. அப்போது அவர் மீது நாகராஜன் வெடிகுண்டுகளை வீசினார். இந்த வெடிகுண்டு வீச்சில் இருந்து தப்பியபடியே நாகராஜனை சுட்டு கொன்றார் சைலேந்திரபாபு.

இளையசமூகத்தில் தாக்கம்
அவரது இந்த தீரசெயல் அப்போதைய மாணவர்கள், இளைஞர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சைலேந்திரபாபு, முறுக்கு மீசை மிடுக்குடன் பங்கேற்கும் போது தாங்களும் இவரைப் போல ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற விதையை விதைத்தவர் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு என்பது மிகையல்ல.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications