செஸ் ஒலிம்பியாட்.. 4 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணி.. 4 மாதங்களில் முடித்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 4 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை தமிழக அரசு 4 மாதங்களில் முடித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

எத்தனை அணிகள்?

எத்தனை அணிகள்?

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பாக ஆண்கள் பிரிவில் 3 அணியும் மற்றும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம் காண உள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கு ஆலோசகராக செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரப் பணிகள்

விளம்பரப் பணிகள்

இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. செஸ் விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களுக்கு வண்ணம் தீட்டுவது, பேனர்கள், தீம் பாடல், செல்ஃபி பாய்ண்ட், பேருந்துகள் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் இடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 பணிகள் நிறைவு

பணிகள் நிறைவு

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் நோக்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான அரங்க ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் நிறைவடைந்துள்ளது. இரே நேரத்தில் 800 அணிகள் செஸ் போட்டியை விளையாடும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை நாளை நடைபெறும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்

இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. சில சோதனைகள் மட்டுமே செய்ய வேண்டிய தேவை உள்ளது. அது நாளை முதல் தொடங்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த மற்ற நாடுகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்படும். ஆனால் தமிழக அரசுக்கு போதுமான கால அவகாசம் இல்லை. ஆனாலும் 4 ஆண்டுகளாக செய்யப்பட வேண்டிய பணிகளை, வெறும் 4 மாதங்களில் தமிழக அரசு முடித்து காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

    செஸ் ஒலிம்பியாட்.. கலக்கும் கோவை.. செஸ் போர்டு வடிவில் ஜொலிக்கும் பஸ் நிறுத்தங்கள்
     சர்வதேச வீரர்கள் வருகை

    சர்வதேச வீரர்கள் வருகை

    மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்கள் சென்னை வர தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு ஏற்கனவே செய்து முடித்துள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+