சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைதிகள் விடுதலை- மாநில அதிகாரத்தை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்- 7 தமிழர் விடுதலைக்கு வழி-ரவிக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: கைதிகள் விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு விவகாரத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை உறுதி செய்து நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனடிப்படையில் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் புதிய அறிவுறுத்தலை ஆளுநருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஹரியானா மாநில அரசு மற்றும் பிறர் எதிர் ராஜ்குமார் என்கிற பிட்டு (The State Of Haryana &others Vs Rajkumar@Bittu - CA 721 of 2021 ) என்ற வழக்கில் நேற்று (03.08.2021 ) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மாநில அரசுகள் பயன்படுத்தக்கூடியதே தவிர ஆளுநர் தன்னிச்சையாக அதைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

தண்டனைக் குறைப்பு தொடர்பாக மாநில அரசின் அறிவுரை ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. தண்டனைக் குறைப்புச் செய்ய ஒவ்வொரு சிறைவாசிக்கும் தனித்தனி ஆணை தேவையில்லை, பொதுவாக வழங்கப்படும் ஆணை அது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட 10 கருணாநிதி படங்கள்... அதிலிருந்து அவர் தேர்வு செய்த பின்னணி இது தான்..!ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட 10 கருணாநிதி படங்கள்... அதிலிருந்து அவர் தேர்வு செய்த பின்னணி இது தான்..!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் தனக்கு உள்ள அதிகாரத்தை மாநில அரசு பயன்படுத்தும்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 433a இல் சொல்லப்பட்டுள்ளவற்றை அது செல்லாமல் ஆக்கிவிடும் (override ) என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே கூட மாநில அரசு தண்டனைக் குறைப்பு செய்ய முடியும். எனினும், நிர்வாக விதிகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட நாகரிகம் ஆகியவற்றின் காரணமாகவே அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் விடுதலை செய்யப்படுவதாக இருந்தால் மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலைப் பெறலாம் (The action of commutation and release can thus be pursuant to a governmental decision and the order may be issued even without the Governor's approval. However, under the Rules of Business and as a matter of constitutional courtesy, it may seek approval of the Governor, if such release is under Article 161 of the Constitution) என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

14 ஆண்டு சிறைவாசிகள்

14 ஆண்டு சிறைவாசிகள்

தண்டனைக் குறைப்பு செய்யப்படும் நபர் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தால் அவரை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் , அவர் ஒரு வேளை 14 ஆண்டுகள் சிறை வாசத்தை முடிகாது இருந்தால் உறுப்பு 161 இன் கீழ் அவரை விடுவிப்பதற்கு ஆளுநருக்கு அறிவுரை வழங்க்கலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளது (The power of remission is to be exercised by the State Government, as an appropriate Government, if the prisoner has undergone 14 years of actual imprisonment in the cases falling within the scope of Section 433-A of the Code and in case the imprisonment is less than 14 years, the power of premature release can be exercised by the Hon'ble Governor though on the aid and advice of the State Government). பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அரசு அளித்த அறிவுரையைத் தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றாமல் காலதாமதம் செய்ததும், பின்னர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் சட்டவிரோதம் என்பதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின்மூலம் தெளிவாக அறியமுடிகிறது.

7 தமிழர் விடுதலையில் அடுத்து என்ன?

7 தமிழர் விடுதலையில் அடுத்து என்ன?

இந்நிலையில், தங்களது மேலான பரிசீலனைக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன்: 1. உச்சநீதிமன்றத்தின் 03.08.2021 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகள் அனைவரையும் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையைப் பொருத்த அளவில் அது அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன்கீழ் வருவதால் அவர்களை விடுவிக்குமாறு ஆளுநருக்குப் புதிதாக அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மாநில அரசின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் நடக்கவேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டு இருப்பதால் மீண்டும் அவர் அதைத் தாமதப்படுத்தவோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ கூடாது என்பதையும் தமிழ்நாடு அரசு மேதகு ஆளுநருக்குச் சுட்டிக்காட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்

புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்

3. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் தண்டனைக் குறைப்புச் செய்வது தொடர்பாக இதுவரை தமிழ்நாடு அரசு எந்தக் கொள்கையையும் உருவாக்கவில்லை என்று பேரறிவாளன் அளித்த ஆர்.டி.ஐ விண்ணப்பத்துக்கு 04.10.2019 அன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது ( Home Department Letter No 50631/Prison -IV/2019 Dated 04.102019) இது வியப்பும் வேதனையும் அளிக்கிறது. மனித உரிமைகளின்பால் மதிப்பு வைத்துள்ள தங்களதுதலைமையிலான அரசு, அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் தண்டனைக் குறைப்புச் செயுய்யவேண்டுமென எதிர்காலங்களில் வரும் முறையீடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒரு கொள்கையை உருவாக்கி எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சரை ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
According the VCK MP Ravikumar Statement said that the Supreme Court had observed the power of Governor under Article 161 to commute sentence or to pardon will override the restrictions imposed under Section 433-A of the CPC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X