சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எகிறும் கொரோனா.. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டபடி நடக்கும்.. அமைச்சர் மூர்த்தி உறுதி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குக்கிராமத்தில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என களைகட்டும்.

உலகில் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு - ரஷ்யாவில் 1 கோடியை தாண்டிய மொத்த கேஸ்கள்! உலகில் கொரோனாவால் 30.78 கோடி பேர் பாதிப்பு - ரஷ்யாவில் 1 கோடியை தாண்டிய மொத்த கேஸ்கள்!

மேலும், பொங்கல் பண்டிகை என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்புபெற்றவை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது அதனை எதிர்த்து தமிழகமே திரண்ட வரலாறு உண்டு. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா உச்சத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்பு 13,000-ஐ தாண்டி சென்று வருகிறது.

எகிறும் கொரோனா தொற்று

எகிறும் கொரோனா தொற்று

இதனால் இந்த ஆண்டு திட்டமிப்பட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று ஒருபக்கம் தகவல்கள் பரவுகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார். சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ' ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறியுள்ளார்.

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
    பழைய வரலாறை பாருங்கள்

    பழைய வரலாறை பாருங்கள்

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இதுபற்றிய ஒரு அறிவிப்பும் இல்லையே என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, '' மதுரையில் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த வரலாறு உண்டு. இன்றே இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    English summary
    Tmilnadu Minister moorthy has assured that jallikattu competitions will be held in Tamil Nadu as planned.He said the javelin throwing competitions will be held following the covid 19 prevention guidelines
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X