காவலர்களை சுட முயன்ற வட மாநில கொள்ளையன் என்கவுண்டர் - போலீஸ் சுற்றி வளைத்தது எப்படி
ஏரிக்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினரை சுட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றனர்.
சென்னை: பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஒரு கொள்ளையனை சுட்டுக்கொன்ற போலீசார் மற்றொரு கொள்ளையனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி கத்தியை பறிமுதல் செய்தனர். 10 தனிப்படை அமைத்து பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினரிடம் கொள்ளையர்கள் பிடிபட்டது தெரியவந்துள்ளது.
Recommended Video
ஏரியை அடுத்த வனப்பகுதிக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிக்க 5 ட்ரோன் கேமராக்கள், 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் என ஒரு பெரும் படையே களமிறங்கியது. 15 மணிநேரத்திற்கும் மேல் நடந்த தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையனை சுட்டு கொன்றுதான் பிடிக்க முடிந்தது.
என்கவுண்டர் செய்யப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தாஷா என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தாஷாவும், நைம் அக்தர் என்ற மற்றொரு கொள்ளையனும் இணைந்தே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்கு வரும்போது வடமாநில இளைஞர்கள் இருவர் இவரிடம் வழி கேட்பது போல் அவரிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.

மிரட்டிய கொள்ளையர்கஙள
இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் துரத்தியபோது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக பொதுமக்கள் பயந்து நின்று விட்டதை சாதகமாக்கி பென்னலூர் ஏரிப் பகுதியில் இருவரும் ஓடி மறைந்தனர்.

தேடுதல் வேட்டை
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தெரிவித்ததன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று 5 மணி நேரம் அப்பகுதியை சுற்றி வளைத்தனர் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக இன்று காலை மீண்டும் கொள்ளையர்களைத் தேடும் பணி துவங்கியது.
அந்தக் காட்டுப் பகுதியில் அனைத்து வழிகளிலும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ட்ரோன் கேமரா
கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்த ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேவலுற்குப்பம் அருகில் அப்பகுதியில் மர்ம நபர் உலவுதாக வந்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையை சேர்ந்த காவலர் அப்பகுதிக்கு சென்ற போது அவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றதாக தெரிகிறது.
இதில் லாவகமாக தப்பிய காவலர்கள் அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுட்டனர்.

துப்பாக்கி பறிமுதல்
காவல்துறையினரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். பலியானவர் உடலை பரிசோதித்ததில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தாஷா என்பதும் தெரிய வந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட முர்தஷாவிடம் இருந்து துப்பாக்கி மற்றும் நகைகள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவனுடன் பதுங்கியிருந்த நைம்அத்தர் என்பவரையும் காவல்துறையின் கைது செய்துள்ளனர்.

ரகசிய இடத்தில் விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள நைம் அக்தரிடம் ஒரகடம் அரசு மதுபான கடையில் விற்பனையாளர் கொலை செய்ததும், ஊழியர் உடலிலிருந்து துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது ஆகிய இந்த சம்பவத்தில் இவர்கள் தொடர்பு இருக்கிறதா என கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். ரகசிய இடத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications