"எல்லாத்தையும் கக்கிருங்க".. போலீஸ் வைத்த 500 கேள்விகள்.. ராஜகோபாலனிடம் துருவித் துருவி விசாரணை!
சென்னை: காம ஆசிரியர் ராஜகோபாலனிடம் மூன்று நாட்கள் 250 கேள்விகளை முன்வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை அடிப்படையாக வைத்து பள்ளி நிர்வாகம் மற்றும் சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த காமக் கொடூர ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

காம ஆசிரியரின் சித்து விளையாட்டுகள்
அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்து பாடம் எடுத்தது, மாணவிகளிடம் அசிங்கமாக பேசியது என்று ராஜகோபாலனின் சித்து விளையாட்டுகள் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜகோபாலனை இன்று வரை 3 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

துருவித்துருவி விசாரணை
பகல், இரவு என்று ராஜகோபாலனிடம் போலீசார் தங்களது பாணியில் துருவித்துருவி அதிரடி விசாரணை நடத்தினார்கள். ராஜகோபாலன் மீது 5 மாணவிகள் குறிப்பாக புகார் அளித்து இருந்தனர். அதன் அடிப்படையில் தலா 50 கேள்விகள் என்று மொத்தம் 250 கேள்விகளை முன்வைத்து காம ஆசிரியரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் எழுப்பிய கேள்விகள்
''நீங்கள் அரங்கேற்றிய பாலியல் தொல்லைகள் பள்ளி நிர்வாகத்துக்கு முன்கூட்டியே தெரியுமா? வேறு எந்த ஆசிரியர்களுக்கு இது தெரியும்? என்ற கேள்வியை போலீசார் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர். மாணவர்களுக்கு என்று பொதுவாக இருக்கும் வாட்ஸ்-அப் குருப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது எப்படி? பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் இதுவரைக்கும் யாருமே கண்காணிப்பு செய்யவில்லையா? இல்லை கண்காணிப்பு செய்து சாதாரணமாக விட்டுவிட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பினர்கள்.

அடுத்த குறிக்கு ரெடி
இந்த கேள்விகளுக்கு அவர் எழுத்துபூர்வமாகவும் பதில் அளிக்க போலீசார் உத்தரவிட்டனர். மாணவிகளை ஆபாச படம் எடுத்தது உள்ளிட்ட அவர் செய்த பாலியல் கொடுமைகளை போலீசார் முழுமையாக பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் வைத்து போலீசார் குற்றபத்திரிகை தயாரித்துளளதாக தெரிகிறது. ராஜகோபாலனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பள்ளி நிர்வாகம் மற்றும் சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications