சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது! மாதந்தோறும் கரண்ட் பில் கட்டுனா 4 மடங்கு வரை பணம் மிச்சமா?.. எப்படி! வாங்க கணக்கு போடலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: அமமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட முக்கியமான விஷயம் தமிழகத்தில் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்பதுதான்!

தமிழகத்தில் தற்போது இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணத்தை செலுத்தி வருகிறோம். இது சாமானியர்களுக்கு மிகவும் சுமையான விஷயமாகவே சொல்லப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த மின் கட்டணம் என்பது சாதாரணமாக பேன், லைட், மிக்ஸி, கிரைண்டர், டிவி வைத்திருப்போருக்கே சுமையை கொடுத்து வருகிறது.

மின் கட்டணம்

மின் கட்டணம்

இந்தியாவில் சில மாநிலங்களில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தி வருவதால் அங்கு மின் கட்டணம் செலுத்தும் கட்டண சுமை குறைகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அமமுக

அமமுக

தற்போது திமுக, அமமுக, தேர்தல் அறிக்கைகளில் கூட தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்கள். 2 மாதத்திற்கும், ஒரு மாதத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது என நீங்கள் நினைக்கலாம். இரு மாதங்களுக்கான தொகை இரண்டாக பிரித்து மாதந்தோறும் செலுத்துவதில் என்ன பிரச்சினை என நீங்கள் நினைத்தால் அது தவறு.

மாதம் ஒரு முறை

மாதம் ஒரு முறை

இதை கணக்கீடுகளுடன் விளக்குகிறோம். ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை 850 யூனிட்டுகளுக்காக மின் கட்டணம் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். மின் கட்டணம் செலுத்துவதில் மொத்தம் 4 ஸ்லாப்கள் உள்ளன. 1 முதல் 100 யூனிட் வரை ஒரு கட்டணம், 101 முதல் 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 201 முதல் 500 யூனிட் வரை ஒரு கட்டணம், கடைசியாக 501 -க்கு மேல் ஒரு கட்டணம் ஆகும்.

வசூல்

வசூல்

இந்த 4 ஸ்லாப்களில் 850 யூனிட்டானது 4ஆவது ஸ்லாப்பில் வருகிறது. 1 முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ 3.5 வசூலிக்கப்படுகிறது. அது போல் 201 முதல் 500 வரை ரூ 4.6 காசுகளும், 501 யூனிட்டுகளுக்கு மேல் ரூ 6.60 காசுகளும் வசூலிக்கப்படுகின்றன.

2 மாதங்கள்

2 மாதங்கள்

850 யூனிட்டுகளுக்கு கணக்கீடு செய்யும் போது ஸ்லாப்களுக்கு ஏற்க பிரித்து செலுத்த வேண்டும். 101 முதல் 200 வரை 350 (100* 3.5= 350) ரூபாய், 201 முதல் 500 வரை 300 யூனிட்டுகளுக்கு (300* 4.6) 1380 ரூபாய் , கடைசியாக 501 யூனிட் முதல் 850 வரை உள்ள 350 யூனிட்டுகளுக்கு 350 ஐ 6.6 ஆல் பெருக்கி வரும் தொகை ரூ 2310 ஆகும். இவை அனைத்தையு்ம கூட்டினால் 4040 வரும். இத்துடன் சர்சார்ஜாக ரூ 50 சேர்க்க வேண்டும் (500 யூனிட்டுக்கு மேல் போனால் 50 ரூபாய் சர்சார்ஜ்). அப்போது மொத்தமாக 4090 ரூபாய் 2 மாதங்களுக்கு சேர்த்து நாம் செலுத்த வேண்டும்.

425 யூனிட்டுகள்

425 யூனிட்டுகள்

இதையே மாதந்தோறும் செலுத்துவது என்றால் 4090 ஐ இரண்டால் வகுப்பது அல்ல மின் கட்டணம். இரு மாதங்களுக்கு 850 யூனிட் என்றால் மாதத்திற்கு 425 யூனிட்டுகள் ஆகின்றன. இது 3வது ஸ்லாபில் வருகிறது. முதல் 100 யூனிட்டுகள் இலவசம், அடுத்தது 100 முதல் 200 வரையிலான 100 யூனிட்டுகளுக்கு ரூ 2-ம் 201 முதல் 425 வரை ரூ 3-ம் வசூலிக்கப்படுகிறது.

4 மடங்கு கட்டணம்

4 மடங்கு கட்டணம்

அப்போது 101 முதல் 200 யூனிட்டுகளுக்கு 100ஐ 2ரூபாயால் பெருக்கினால் 200 ரூபாய் வரும். அது போல் 201 முதல் 425 யூனிட் என்றால் 225 ஐ ரூ 3 ஆக பெருக்கினால் 675 வரும். இரண்டையும் கூட்டினால் 875 ரூபாய் மின் கட்டணம். இத்துடன் ரூ 40 சர்சார்ஜ் ((500 யூனிட்டுக்குள் 40 ரூபாய் சர்சார்ஜ்)) சேர்த்தால் 915 ரூபாய்தான் மின் கட்டணமாக வரும். ஆக மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவதை விட இரு மாதங்களுக்கு ஒரு முறை நாம் மின் கட்டணம் செலுத்துவது 4 மடங்கு அதிகமாக வருகிறது.

English summary
Here is the calculation for TNEB reading calculations for monthly and bimonthly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X