வதந்திகளை நம்பாதீங்க.. குரூப் 2 ரிசல்ட் எப்போது?.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் குரூப் 2 ரிசல்ட் எப்போது வெளியாகும் எனவும் அந்த தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

தாமதமாகும் தேர்வு முடிவு
இந்த தேர்வுக்கு மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு வகைகளில் ஆட்சேர்ப்பு நடக்கிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

பரவும் வதந்தி
அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான தேர்வு II/II A (தொகுதி II/II A)ற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022ல் நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இநு்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்வுது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எப்போது ரிசல்ட்?
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை www.tnpsc.gov.in மட்டுமே அணுக வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications