சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று தளர்வில்லாமல் ஊரடங்கு உத்தரவு அமல்.. பால், மருந்து மட்டுமே அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று தளர்வில்லாமல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த முழு ஊரடங்கில் பால், மருந்து கடைகள் திறக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.2 லட்சமாகும். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000 முதல் 6000 வரை வருகிறது.

Today full lockdown implements in Tamilnadu

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு அமலாகி வருகிறது. அதன்படி இன்று 7ஆவது வாரமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பால், மருந்து கடைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி இல்லை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடும் என்பதால் தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது!உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது!

இதனால் மக்கள் சனிக்கிழமையே ஒன்று கூடி அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிகிறார்கள். அது போல் இறைச்சி வகைகளையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீர்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Today full lockdown implements in Tamilnadu. Milk and Medicines will be opened today. others will be shut down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X