இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
Recommended Video

சென்னை: தென்னிந்தியாவில் மிகவும் பிரதான உணவு இட்லியாகும். இந்த இட்லிக்கு ஒரு தினத்தை கொண்டாடும் விதமாக உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.

தயார்
ஆண்டுதோறும் விதவிதமாக இட்லிகள் தயார் செய்யப்பட்டு கண்காட்சி போல் வைக்கப்படும். அதன்படி சென்னை காசிமேட்டில் உள்ள மீனவர் பகுதிகளில் மிகவும் பிரதானமாக உண்ணப்படும் உணவு இட்லியாகும். இங்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான இனியவன் என்பவர் விதவிதமான இட்லிகளை தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார்.

கின்னஸ் சாதனை
இந்த இட்லியை வைத்து இட்லி தினத்தை கொண்டாடும் வகையிலும் விரும்பிய மக்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான இட்லிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013-இல் இனியவன் என்பவர் 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

இட்லி தயார்
அதன்படி வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 18-ஐ நினைவுகூரும் விதமாக 18.4.19 என எழுதப்பட்ட இட்லி கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அது போல் என் வாக்கு விற்பனைக்கு அல்ல எனப்படும் ஸ்லோகனும் அதில் இடம்பெற்றிருந்தது. அது போல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவத்திலாலான இட்லியும் தயார் செய்யப்பட்டிருந்தது.

ஓட்டு போட்டால் நாட்டுக்கு நல்லது
இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஓட்டு போட்டால் நாட்டுக்கு நல்லது, சரியாக வாக்களிப்போம், ஜனநாயக கடமையை ஆற்றுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறைய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

வேக வைக்க பயன்படுத்துவது
இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா என்ற சம்ஸ்கிருத பெயரே இட்லி என்றானது. 7-ஆவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி ஹுவாங் சுவான் இந்தியாவில் உள்ள அனைத்தையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் இட்லியை வேகவைக்க பயன்படுத்தும் இட்லி தட்டுகள் குறித்து அவர் குறிப்பேதும் தெரிவிக்கவில்லை.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications