திநகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ.. சென்னையில் பல சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை: திநகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ.. சென்னையில் பல சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லை. இதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இதில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதர கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கின்றன. தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
மோடி பிரசாரம்; உத்தரபிரதேசம் மாநில பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.45 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார். சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்று , தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
ரோடு ஷோ: பனகல் பார்க் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவுக்கு 'ரோடு ஷோ' மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் ரோடு ஷோ காரணமாக பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை காண பாஜக தொண்டர்களும் நாளை தி. நகர் பகுதியில் அதிக அளவில் திரளக் கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் ரோடு ஷோவையொட்டி நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
போக்குவரத்து மாற்றம்: மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் 09.04.2024 அன்று மாலை 18.00 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு. 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் 3.00 மணி முதல் 8.00 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதியம் 2 முதல் 9 மணி வரை: பிற்பகல் 15.00 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும். தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் (Goods Vehicle) 2.00 மணி முதல் 9.00 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாறை நோக்கி செல்லும் வாகனங்கள். மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள். CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள். வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள். கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள். CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள். எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Now
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications