ஏதோ அவசரம் இருக்கு.. உதயநிதியை அமைச்சராக்கும் முதல்வர் ஸ்டாலின் பற்றி டிடிவி தினகரன் பரபர கருத்து!
சென்னை: உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் ஏதோ அவசரம் தெரிகிறது. உதயநிதி விஷயத்தில் அவசரமாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த அவசரத்துக்கான காரணத்தை காலம் உணர்த்தும்'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக தோல்வியடைந்தது. இதையடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார்.
முக ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதில் அமைச்சரவையில் சிறுசிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன.

அமைச்சரவை விரிவாக்கம்
அதாவது அமைச்சரவையில் துறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது.. எனினும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளிப்படையாக பேசி வந்தனர். இதில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இந்நிலையில் தான் நாளை முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அமைச்சராகும் உதயநிதி
கடந்த சில நாட்களாக உதயநிதி அமைச்சராக உள்ளார் என்ற செய்தி வேகமாக பரவியது. இந்நிலையில் தான் நேற்று உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரைத்துள்ளார். அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஆளுநரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் தகவல் வெளியிட்டுள்ளார். .

நாளை பதவியேற்பு
இளைஞர்களை கவரும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் நாளை தான் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்காக சட்டசபையில் அறை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரன் பேட்டி
இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் விஷயத்தில் ஆளும் கட்சியின் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாறாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அவசரப்படும் ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் திமுகவில் சட்டசபை உறுப்பினராக உள்ளார். அதனால் அமைச்சராக்குகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் ஒன்று மட்டும் தெரிகிறது. ஸ்டாலின் அவசர வேலையாக அமைச்சர் பொறுப்பு வழங்குவது தெரிகிறது. ஏனென்றால் ஸ்டாலின் 1989ல் சட்டசபை உறுப்பினராக இருந்தார். அப்போது அவரை அவரது தந்தை அமைச்சராக்கவில்லை. உதயநிதி விஷயத்தில் ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது. இந்த அவசரத்துக்கான காரணம் என்ன என்பதை காலம் தான் உணர்த்தும்'' என்றார்.












Click it and Unblock the Notifications