"டிடிவி வீட்டில் இல்லை".. கூண்டோடு ராஜினாமா செய்த முக்கிய அமமுக தலைகள்.. சசிகலாவால் வந்த மோதலா?
சென்னை: இதோ ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலகுகிறோம் என சொல்லி தங்களின் ராஜினாமா கடிதங்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுப்பி அ.ம.மு.க.வில் ஏக ரகளை செய்திருக்கிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்.
அமமுகவில் சசிகலா ஆதரவு நிர்வாகிகள் சிலரால் கட்சிக்குள் சின்ன சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நிர்வாகிகள் சிலர் மீது டிடிவி தினகரன் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகர அ.ம.மு.க. செயலாளராக இருந்தவர் கந்தன். லோக்கலில் கட்சிக்காரர்களிடமும் பொது மக்களிடமும் பரவலான அறிமுகமானவர். சசிகலாவை அவ்வப்போது சந்தித்து வருகிறார்.

சசிகலா டிடிவி
இந்த நிலையில் சசிகலாவின் நிகழ்ச்சிகளில் அனைத்திலும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார் கந்தன். சசிகலா நிகழ்ச்சிகளுக்கு தலைமையின் உத்தரவோ அனுமதியோ இல்லாமல் கலந்து கொள்ளக்கூடாது என மா.செ.க்கள் மூலமாக கட்சியின் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறாராம் தினகரன். அதனை மீறி செயல்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குகிறார்.

நீக்கம்
அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, கந்தனை நீக்கினார் தினகரன். இதற்கு ஒட்டுமொத்த பூந்தமல்லி நகர அ.ம.மு.க.வினரும் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்களாம். கந்தனை நீக்கியதை திரும்பப்பெற வேண்டும்.. அவர் முக்கியமான நிர்வாகி.. அவரை எப்படி நீக்கலாம் என போர்க்குரல் உயர்த்தினார்கள்.

தினகரன் உறுதி
ஆனால் இதை தினகரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். நிர்வாகிகள் எதிர்ப்புக்கு தினகரன் அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு படையெடுத்த பூந்தமல்லி அ.ம.மு.க.வினர் தினகரனை சந்திக்க முயற்சித்தனர்.

அனுமதி இல்லை
அனுமதி கிடைக்கவில்லை. தினகரன் வீட்டில் இல்லை என்றும், இங்கிருந்து கிளம்பிச்செல்லுங்கள் என்றும் வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கே இருந்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜினாமா
தினகரனின் இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்த நிர்வாகிகள் அங்கேயே கூச்சல் போட்டுள்ளனர். அதோடு தங்களின் பதவிகளைக் கூண்டோடு ராஜினாமா செய்து அதனை தினகரனுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அ.ம.மு.க. வட்டாரங்களில் திடீர் பரபரப்பை உருவாக்கியிருந்தது. சசிகலாவால் அமமுகவிற்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த சலசலப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications