அஸ்ரா கார்க் வேண்டாம்.. கோர்ட்டில் கேட்ட தவெக.. அவர் யாருன்னு தெரியுமா? தமிழக அரசு முக்கிய வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் வாதம் வைத்தது. இதற்கு தமிழக அரசு முறையான பதிலடியை கோர்ட்டில் கொடுத்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரிக்கிறது. விஜய் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதம் வைத்து வருகின்றார்.

TVK Vijay

த.வெ.க. தரப்பு வாதத்தில்

கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும், தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார்.

பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. இதை பற்றி முறையாக விசாரிக்க நீதிபதி தலைமையிலான SIT தேவை. இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும், என்று வாதம் வைத்தனர்.

நீதிமன்றம் கேள்வி

தேர்தல் பிரச்சார நெறிமுறை தொடர்பான வழக்கின் போது விஜய் பற்றிய கருத்துகளை உயர்நீதிமன்றம் முன்வைத்தது ஏன்? தேர்தல் பிரச்சாரம், ரோடு ஷோ வழிகாட்டுதல்களுக்கான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கானது எப்படி? கரூர் பிரச்சாரம் தொடர்பான நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் SIT விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது

தமிழக அரசு வாதம்

இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. அதன் அடிப்படையிலேயே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. கோர்ட்தான் அஸ்ரா கார்க் என்ற அதிகாரியை நியமித்தது. தமிழக அரசு அதில் எந்த தலையீடும் செய்யவில்லை.

அஸ்ரா கார்க் , சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார். அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது என்பதை அதில் அரசின் தலையீடு இல்லை. அதை கேள்வி எழுப்ப முடியாது. முக்கியமாக குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+