சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காமராஜரா, மோடியா.. நேத்து ராத்திரி கலகல சண்டை... தமிழிசை, ஜோதிமணி மாறி மாறி டிவீட்!

தமிழிசை சவுந்தராஜன், ஜோதிமணி ட்விட்டரில் காரசாரமாக சண்டையிட்டு கொண்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காமராஜரா?.. மோடியா?.. தமிழிசை, ஜோதிமணி மாறி மாறி டிவீட்!- வீடியோ

    சென்னை: நேத்து தமிழகமே தேமுதிக கூட்டணிக்காக அல்லாடியது, பிரதமர் மோடி சென்னை வந்து போனது என்று பரபரப்பும், பிஸியிலும் இருந்தால், இவங்க ரெண்டு பேரும் ட்விட்டரில் ஒரு சண்டையே போட்டு முடித்திருக்கிறார்கள். அது தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், காங்கிரசின் ஜோதிமணியும்தான்!

    பொதுவாக, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். அதனால்தானோ என்னவோ, நாடு தழுவிய அளவிலிருந்து மாநில அளவில்வரை ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்டு, கிண்டல் கேலி என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    எப்போதெல்லாம் சாக்கு கிடைக்குமோ அப்போதெல்லாம் ஒரு சொட்டு வைத்து நக்கல் அடித்துவிட்டு போவார் ஜோதிமணி. அதற்கு சரியான பதிலடியை திருப்பி தந்தே விடுவார் தமிழிசை.

    மதிப்பா கேள்வி கேளுங்க.. டென்ஷன் ஆன கே.எஸ். அழகிரி! மதிப்பா கேள்வி கேளுங்க.. டென்ஷன் ஆன கே.எஸ். அழகிரி!

    காமராஜர்

    முதலில் ஜோதிமணிதான் ஒரு ட்வீட் போட்டு துவக்கி உள்ளார். அதில், "மாட்டு அரசியலை முழுமூச்சோடு எதிர்த்த, அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மதிப்புமிகுந்த தலைவர் காமராசரை உயிரோடு எரித்துக் கொலை செய்ய முயன்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் வாரிசான மோடிக்கு காமராசரைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்திரா காந்தி

    இதற்கு தமிழிசை அளித்த பதில், "காமராஜரை பற்றி பேச மோடிக்கு என்ன உரிமை?எனக்கேட்கும் காங்கிரசாரர்கள்தான் அன்று காமராஜரை கைவிட்டுஇந்திரா காங்.கட்சிக்கு ஓடியவர்கள்? மதுரை ரயிலில் வந்த இந்திராவை கொலைவெறி தாக்கி அவர் சிந்திய ரத்தத்தை மோசமாக விமர்சனம் செய்த திமுகவுடன் ஊழல் கூட்டணி சேர்ந்து கொண்டது பதவிக்காகதானே?" என்று நறுக்கென ஒரு கேள்வியுடன் ட்வீட் போட்டார்.

    ஏழைத்தாய்

    பிறகு ஜோதிமணியின் மற்றொரு ட்வீட்டில், "ஏழைத்தாயின் மகன் என்று ஊரெல்லாம் வேஷம் போட்டுத்திரியும் திருவாளர் பத்துலட்ச ரூபாய் கோட் மோடிக்கு, உண்மையிலேயே ஏழைத்தாயின் மகனாகப் பிறந்து,இறுதிமூச்சுவரை எளிமையாகவே வாழ்ந்து,எழை,எளிய மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவரைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?" என்று வினா எழுப்பி இருந்தார்.

    ஒப்பீடு

    இதற்கு தமிழிசை, "தன்குடும்பம் தன்மக்கள் என்றில்லாமல் ஓய்வு இன்றி நாட்டுக்காக உழைப்பு! ஊழல் இல்லாமல் நல்லாட்சி.ஏழை எளியோருக்காக எண்ணற்ற திட்டங்கள்தீட்டி செயலாற்றி வரும் வாழும் காமராஜர் ஆன மோடிக்குதானே அவரை குறிப்பிடும் தகுதி உண்டு? எந்த காங்.தலைவரை நீங்கள் ஊழலற்ற அவருடன் ஒப்பீடு காட்டமுடியும்?" என்று பதில் அளித்துள்ளார்.

    மோடி-காமராஜர்

    மோடி-காமராஜர்

    ஆக மொத்தம் ரெண்டு பேருமே மோடியை பற்றிதான் பேசியிருக்கிறார்கள். இதில் ஹைலைட் ஆன விஷயம், "காமராஜர் ஆன மோடி" என்று தமிழிசை வைத்த பஞ்ச்தான்! நேற்று பிரதமர் சென்னை வந்ததால் இப்படி ஒரு ட்விட்டர் சண்டை ஆரம்பமானதா என்று தெரியவில்லை. ஆனால் பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இரண்டு ட்வீட்டுக்குமே சரமாரி கமெண்ட்களை பதிவிட்டு பரபரப்பாக்கி விட்டனர்.

    English summary
    Clash betweent Tamizhisai Soundarajan and Jothimani in Twitter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X