தூய்மையான தமிழ்நாடுதான் இலக்கு! உதயநிதி தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்த முக்கிய கூட்டம்
சென்னை: தமிழகத்தை முழுவதுமாக தூய்மைப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் "தூய்மை இயக்கம்" திட்டப் பணிகள் குறித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குப்பை சேகரிப்பு, கழிவு பிரிப்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் தூய்மை இயக்கத் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும். குப்பை மேலாண்மை சரியாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக, தூய்மை இயக்கம் திட்டம் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தூய்மை இயக்கம் சார்பில் முதற்கட்டமாக, சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பல்வேறு வகையான கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 12.1.2026 முதல் 25.1.2026 வரை நடைபெற்ற "குப்பைத் திருவிழா"வின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. குப்பைத் திருவிழாவில் 13,400 க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், 14,160 கழிவு ஒருங்கிணைப்பாளர்கள், 1.25 லட்சம் சுய உதவிக்குழுப் பெண்கள் பங்களிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,411 டன் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகள் பெறப்பட்டு நிலத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.
இதற்கு முன் 90,000 திற்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற கழிவு சேகரிப்பு இயக்கம் மூலமாக பெறப்பட்ட கழிவுகள் மற்றும் இக்குப்பைத் விழாவில் பெறப்பட்ட கழிவுகள் மூலமாக ரூபாய் 4 கோடியே 30 லட்சத்திற்கும் மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கழிவுகளைப் பிரித்து வழங்கி ஒன்றிணைந்து தூய்மையான தமிழ்நாட்டிற்கு தங்கள் பங்களிப்பை ஆற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு மாதமும் குப்பைத் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன்,
இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன்.இ.ஆ.ப.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.ப. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப., உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications