உலகையே திரும்பி பார்க்க வைத்த.. 'மிஸ்டரி' போன் கால்.. புடினிடம் போனை போட்ட கெஞ்சிய டிரம்ப்?
சென்னை: ஈரானில் ஒரு பக்கம் ஏவுகணைகள் சீறிப்பாய்கின்றன; மறுபக்கம் உலகமே உற்றுநோக்கும் ஒரு 'மிஸ்டரி' டெலிபோன் கால் அரங்கேறியிருக்கிறது. ஈரானின் புதிய உச்ச தலைவர் ரஹ்பருக்கு (Rahbar) ரஷ்ய அதிபர் புதின் தனது 'அசைக்க முடியாத ஆதரவை' தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, டிரம்ப் அவசரம் அவசரமாக புதினைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
"எதற்காக இந்த திடீர் போன் கால்?" - இதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. இதற்குப் பின்னால் இருப்பது அச்சம் என்கிறார்கள்.. 'எப்படியாவது இதிலிருந்து வெளியேறினால் போதும்' என்கிற டிரம்பின் தவிப்புதான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

டிரம்பின் 'யூ-டர்ன்' அரசியல்: 1 முதல் 10 நாட்கள் வரை!
இந்த போர் தொடங்கியதிலிருந்து டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை வெளியிடும் அறிக்கைகளை கவனித்தாலே அமெரிக்காவின் குழப்பம் புரியும்.
முதல் நாள்: "ஈரானில் ஆட்சி மாற்றமே (Regime Change) எங்கள் இலக்கு" என்று கர்ஜித்தார் டிரம்ப்.
இரண்டாம் நாள்: "பேச்சுவார்த்தைக்கு நான் தயார்" என கொஞ்சம் இறங்கி வந்தார்.
நான்காம் நாள்: "குர்திஷ் படைகள் எங்களுடன் இணைய வேண்டும்" என்றார் (பிறகு அதை அவரே மறுத்தார்).
ஐந்தாம் நாள்: "ஈரான் ஒரு டீலுக்கு வரத் துடிக்கிறது" என ஒரு பிட்டைப் போட்டார்.
ஆறாம் நாள்: திடீரென "ஈரான் நிபந்தனையற்ற சரணாகதி" (Unconditional Surrender) என மிரட்டினார்.
ஏழாம் நாள்: ஈரானின் புதிய ரஹ்பரைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கும் பங்கு இருக்க வேண்டும் என விசித்திரமான கோரிக்கையை வைத்தார்.
பத்தாம் நாள்: ஈரானின் புதிய ரஹ்பர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில் "ஆட்சி மாற்றம்" என்ற வார்த்தையே இல்லை. ஏவுகணைத் தளங்களை அழிப்பது மட்டுமே இலக்கு என அந்தர் பல்டி அடித்தது அமெரிக்கா.
"ஜெயிச்சிட்டோம்... ஆனா ஜெயிக்கல!"
பத்தாம் நாள் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்: "அமெரிக்கா இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டது!" ஆனால் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (WSJ) செய்திப்படி, டிரம்பின் ஆலோசகர்களே "இப்போதைக்கு ஒரு எக்சிட் ரூட் (Exit Ramp) பிடித்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம்" என அவரை நச்சரிக்கிறார்களாம்.
இஸ்ரேலின் நிலைமை இன்னும் மோசம். ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலைகுலைந்து போயிருக்கிறது. சேட்டிலைட் படங்களில் இதைக் காட்டாவிட்டாலும், ஹீப்ரு ட்விட்டர் பக்கங்களில் (Hebrew Twitter) சிதறிக்கிடக்கும் வீடியோக்களே அதற்கு சாட்சி.
சிக்கல் எங்கே?
டிரம்ப் ஒருதலைப்பட்சமாக வெற்றியை அறிவித்துவிட்டுப் போரை நிறுத்தலாம். ஆனால், ஈரான் அதற்குச் சம்மதிக்க வேண்டுமே! ஈரானைப் பொறுத்தவரை பிப்ரவரி 28 முதல் ஒரே நிலைப்பாடுதான்:
போர் நிறுத்தம் கிடையாது. 2. பேச்சுவார்த்தை கிடையாது. 3. எங்கள் நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டவர் தலையீடு கூடாது.
இன்று காலை கூட ஈரான் பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில், ஈரானை சமாதானப்படுத்தி ஒரு 'பரஸ்பர போர் நிறுத்தத்திற்கு' (Mutual Ceasefire) சம்மதிக்க வைக்க யாராவது ஒரு நபர் தேவைப்படுகிறார். அந்த 'மிடியேட்டர்' வேலையைச் செய்ய புதினைத் தவிர வேறு ஆள் இல்லை என்பதால் தான், டிரம்ப் இப்போது புதினின் கதவைத் தட்டுகிறார். இதற்காகவே அவர் புதினுக்கு போனை போட்டு கெஞ்சியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 'ஈகோ'வும் ஈரானின் 'பிடிவாதமும்' மோதும் இந்த போர்க்களத்தில், புதின் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அடுத்த ட்விஸ்ட்!
-
7 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா.. ஈரான் உடனான சண்டையில் மொத்தமா போச்சு! -
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்காமல் நைசாக நழுவிய இந்திய கப்பல்.. புதிய ரூட்டை பிடித்து பயணம்! ஆஹா -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
துபாய் Oracle அலுவலகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?











Click it and Unblock the Notifications