மார்ச் 20-ம் தேதி அரசியல் ஆசான் நினைவுநாள்! தஞ்சாவூரில் மவுனம் கலைக்கத் தயாராகும் சசிகலா?
சென்னை: மார்ச் 20-ம் தேதி கணவர் நடராஜனின் 4-ம் ஆண்டு நினைவுநாள் வருவதால் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்லவிருக்கிறார் சசிகலா.
மேலும், அன்றைய தினம் தனது நிலைப்பாடு குறித்து மனம் திறந்து அவர் பேசவும் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மறைந்த ம.நடராசனை பொறுத்தவரை சசிகலாவுக்கு மட்டுமல்ல ஜெயலலிதாவுக்கே அரசியல் ஆசானாக இருந்து ஒரு காலத்தில் அவரை இயக்கியவர் என்பது திரும்பிப்பார்க்கத் தக்கது.

நடராசன் நினைவுநாள்
புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் வரும் 20-ம் தேதி வருகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ள சசிகலா, இதுவரை தாம் காத்து வந்த மவுனத்தை அன்றைய தினம் கலைப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொங்கு மண்டலம்
டெல்டா மாவட்டங்கள், மத்திய மண்டலம், தென் மண்டலம் என இதுவரை சுற்றுப்பயணம் சென்ற சசிகலா அடுத்ததாக கொங்கு மண்டலத்திற்கும் விசிட் அடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இதேபோல் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா அழைப்பை ஏற்று தேனி மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செல்வது பற்றி சசிகலா தரப்பு யோசிக்கத் தொடங்கியிருக்கிறதாம். தேனி மாவட்ட அதிமுகச் செயலாளர் சையது கான் ஏற்கனவே சசிகலாவின் அதிமுகவில் இணைக்க வேண்டும் என குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சசிகலா அமைதி
சிறையில் இருந்து விடுதலையாகி ஏறத்தாழ ஒரு ஆண்டு முழுமையாக முடிவடைந்த பிறகும் சசிகலா காட்டி வரும் அமைதியை அவரது ஆதரவாளர்களே ரசிக்கவில்லை. இப்படியே தொடர் அமைதி காத்தால் அது மேலும் அவர்களை சோர்வடையச் செய்துவிடும் என்பதால், தனது அரசியல் ஆசானும், கணவருமான நடராஜன் நினைவிடத்தில் வைத்து மனம் திறந்து தனது நிலைப்பாட்டை சசிகலா வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

குடும்ப உறவுகள்
நடராசன் மீது சசிகலா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனிப்பட்ட மரியாதை உண்டு. இதனால் மார்ச் 20-ம் தேதி நடராசன் நினைவிடத்தில் நான்காம் ஆண்டு அஞ்சலி செலுத்துவதற்காக ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் தஞ்சைக்கு விஜயம் செய்யவுள்ளது. சாதாரண மக்கள் தொடர்பு அலுவலராக பணியை தொடங்கி தேசியத் தலைவர்களான நரசிமராவ், எல்.கே.அத்வானி, உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் நட்பை பேணி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பாடம்
இதேபோல் எம்.ஜி.ஆர். மறைந்த தருணத்தில் அரசியலை விட்டே ஒதுங்க முற்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசியல் கற்பித்து ஜானகியிடம் இருந்து அவரை அதிமுகவை கைப்பற்ற வைத்தவர் நடராசன். இதேபோல் திரைமறைவில் சசிகலா, டிடிவி தினகரன் என பலருக்கும் தாம் மறையும் வரை அரசியல் கற்றுக்கொடுத்து வந்தவர் நடராசன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications