சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானதி, சீமான், பிரேமலதா, குஷ்பு, செல்லூர் ராஜூ.. தோல்வி முகம்! நட்சத்திர வேட்பாளர்கள் விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: வானதி சீனிவாசன், சீமான், பிரேமலதா, குஷ்பு, செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாக மாலைமுரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. ஜெயக்குமார் கடும் போட்டியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது மாலைமுரசு தொலைக்காட்சி. இன்று நட்சத்திர வேட்பாளர்களில் யார் யார் வெல்வார்கள், யார் யார் தோற்க வாய்ப்பு உள்ளது என்பதை வெளியிட்டுள்ளது.

இதன்படி தற்போது தோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளவர்களின் பட்டியலையும் அங்கு யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பதையும் இப்போது பார்ப்போம்.

திமுக கூட்டணி 151 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.. 234 தொகுதிக்கும் மாலைமுரசு சர்வே வெளியீடுதிமுக கூட்டணி 151 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.. 234 தொகுதிக்கும் மாலைமுரசு சர்வே வெளியீடு

கோவை தெற்கு

கோவை தெற்கு

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மாலை முரசு சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனுக்கு 35 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு 29 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு 24 சதவீதம் பேர் ஆதரவு கிடைத்துள்ளது.

திருவெற்றியூர்

திருவெற்றியூர்

திருவெற்றியூர் தொகுதியில் திமுக கூட்டணி 39 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 32 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் கட்சி 19 சதவீதம் ஆதரவையும், அமமுக 3 சதவீதம் ஆதரவையும், மநீம 3% ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதிமுக வேட்பாளர் குப்பன் இரண்டாம் இடத்தையும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மூன்றாம் இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு

மாலை முரசு சர்வேயில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக கூட்டணிக்கு 45% பேர் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணிக்கு 41 % பேர் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலம் தொகுதி

விருத்தாச்சலம் தொகுதி

விருத்தாச்சலம் தொகுதியில் அதிகபட்சமாக திமுக கூட்டணிக்கு 43 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் அங்கு திமுகவே வெல்லும் என்று கணிப்பில் தெரிகிறது.. அங்கு அதிமுக கூட்டணிக்கு 39 சதவீத ஆதரவும், அமமுக கூட்டணியில் போட்டியிடும் பிரேமலதாவிற்கு 11 சதவீதம் ஆதரவு மட்டுமே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பிரேமலதா தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மேற்கு

மதுரை மேற்கு

மதுரை மேற்கு தொகுதியில் திமுக கூட்டணி 42 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 40 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் ஆதரவையும், அமமுக 4 சதவீதம் ஆதரவையும், மநீம 5 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக வேட்பாளர் சின்னம்மாள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு இரண்டாம் இடத்தை பிடித்து தோல்வி அடையக்கூடும் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இராயபுரம் தொகுதி

இராயபுரம் தொகுதி

இராயபுரம் தொகுதியில் அதிமுக+ 43 சதவீதம் ஆதரவையும், திமுக+ 43 சதவீதம் ஆதரவையும் பெற்று சமபலத்தில் உள்ளது, அமமுக 1 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3 சதவீதம் ஆதரவையும், மநீம 4 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து இல்லை 6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் இங்கு போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், திமுக வேட்பாளர் மூர்த்திக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.

English summary
malaimurasu survey said that Vanathi seenivasn, Seeman, Premalatha, Khushbu, sellurraju going to face defeat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X