சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 தமிழர் விடுதலை விவகாரம்... ஹீரோவாக்காதீங்க என சொன்ன கார்த்தி சிதம்பரத்துக்கு விசிக வன்னியரசு பதில்

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகி வன்னியரசு பதிலளித்துள்ளார்.

7 தமிழரை விடுதலை செய்வதற்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இந்த சந்திப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் தமது சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

VCK and Congress clash over Seven Tamils Release

அதில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை சட்டரீதியாக விடுதலை செய்ய முடியுமென்றால் விடுதலை செய்யலாம்.#ReleasePerarivalan ஆனால் அவர்களை ஹீரோக்களாக ஆக்ககூடாது.

அதே வேளையில் ராஜீவ்காந்தி அவர்களுடன் இறந்துபோனவர்களையும் நினைவு கூறவேண்டும். #rajivgandhiismurderer வக்காலத்து வாங்குபவர்கள் கொலை செய்யப்பட்ட தர்மன்,சாந்தணிபேகம்,ராஜகுரு,சந்திரா,எட்வர்ட் ஜோசப்,முகமது இக்பால்,லதா கண்ணன்,டரில் ஜூட்பீட்டர்ஸ்,கோகிலவாணி,முனுசாமி,சரோஜா தேவி,பிரதீப் இவர்களது குடும்பத்தினருக்கும் என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னிய அரசு பதில் அளித்துள்ளார். அதில், பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை வேண்டிதான் நிற்கிறோம்.ஹீரோவாக்க அல்ல!காங்கிரசும் இந்த கோரிக்கையில் சேர்ந்து ஒலிக்க வேண்டும். இது தான் தமிழ்நாட்டின் குரல். கால்நூற்றாண்டுக்கும் மேலான தண்டனை போதாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
VCK and Congress clash over Seven Tamils Release in Rajiv Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X