ஆர்என்.ரவி இல்லை.. ஆர்எஸ்எஸ் ரவி என நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.. பதவியை மதிக்கல - திருமா பளிச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்ற தாமதம் ஏற்பட்டிருப்பதால் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார். தொடர்ந்து ஆளுநர் ரவி பாஜகவினர் போல பேசி வருவது எதிர்ப்புகளைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்துள்ளார்.

மாநாடு

மாநாடு

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 20ஆவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இயக்குனர் பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நவம்பர் 1 ஆர்ப்பாட்டம்

நவம்பர் 1 ஆர்ப்பாட்டம்

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தச் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "நவம்பர் 1ஆம் தேதி மொழி வழி மாநிலம் பிரிந்ததால் அந்த நாள் மொழி வழி தேசிய உரிமை நாளாக கடைபிடிக்கப்பட்டு, அன்று விசிக சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுவரை சிங்கள கடற்படையினர் தான் தாக்குதல் நடத்தி வந்தனர். இப்போது இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலால் வீரவேல் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

இந்திய கடற்படையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு குடியரசு தலைவரிடம் வழங்கிய அறிக்கையில் அலுவல் மொழி குறித்த அறிக்கையின்படி, இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியை திணிக்கிற முயற்சியை கண்டிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற பாஜக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

அண்ணாமலை - வேதனை

அண்ணாமலை - வேதனை

சமீபத்தில் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார். அது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இது போன்ற அவமதிப்புகள் ஏற்கப்பட வேண்டியது அல்ல. ஊடகவியலாளர்களின் உணர்வுகளை மதித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் தன் கருத்துக்கும், செயலுக்கும் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.

 ஆர்எஸ்எஸ் ரவி

ஆர்எஸ்எஸ் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவர் என்ன பொறுப்பில், பதவியில் இருக்கிறார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவே கருத்துகளைப் பேசி வருகிறார்.

பதவியை மதிப்பதில்லை

பதவியை மதிப்பதில்லை

மாநில அரசின் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். மாநில அரசையும் அவர் பொருட்படுத்துவதில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. தமிழக ஆளுநரின் போக்கு வேதனை அளிக்கிறது. அவர் தான் வகிக்கும் பதவியை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

எதிராக செயல்படும் ஆளுநர்

எதிராக செயல்படும் ஆளுநர்

தேசியக் கொடியை நாம் ஒன்றாக வைத்திருக்கிறோம். தேசிய கீதத்தை ஒன்றாக வைத்திருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தை ஒன்றாக வைத்திருக்கிறோம். ஆனால் அந்தந்த மாநிலங்கள் தனித்து இயங்க அரசமைப்புச் சட்டமே அனுமதி அளித்திருக்கிறது. அதற்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்." என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+