கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம்
சென்னை: வணிக சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில வணிக சிலிண்டரை 4200 ரூபாய் முதல் 5000 வரை விற்கிறார்கள். அவ்வளவு விலை கொடுத்து கடையை நடத்த முடியாது என்பதால், பல ஓட்டல்கள் செயல்படவில்லை. ஓட்டல்கள் செயல்படாமல் போனால் போதிய 'ஆர்டர்' கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கிடைக்காது. அப்படியான நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதுடன், விலையும் கடுமையாக சரிந்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக வணிக சிலிண்டருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டரை நம்பியிருக்கும் ஓட்டல்களும் உணவை தயாரிக்க முடியாமல் கடைகளை அடுத்தடுத்து மூடி வருகின்றன. திறந்துள்ள ஒரு சில கடைகளுமே பதுக்கி வைக்கப்பட்டு 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சிலிண்டர்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுமே கேஸ் அதிகம் செலவாகும் உணவுகளை தயாரிப்பதை நிறுத்தி உள்ளனர். பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஹாஸ்டல்களும் உணவு தயாரிக்க முடியாத நிலையில் உள்ளன,

ஓட்டல்கள் மூடல்
இதன் பாதிப்பு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருப்பதால், 'ஆர்டர்' இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் தேங்கி உள்ளன. பெருமளவில் காய்கறி வாங்கக்கூடிய ஓட்டல்கள் அதற்கான ஆர்டரை கொடுக்காததால், கோயம்பேடு மார்க்கெட் மொத்த கடைகளின் முன்பு வாங்க ஆள் இல்லாமல் மூட்டை, மூட்டையாக காய்கறிகள் தேங்கி வருகின்றன.
தக்காளி விலை வீழ்ச்சி
ஏற்கனவே வரத்து அதிகமாக இருப்பதால் குறைந்திருந்த காய்கறிகளின் விலை, தற்போது காய்கறிகள் தேக்கம் அடைந்திருப்பதால், மேலும் விலை சரிந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரை தான் விற்றது. இதேபோல் முட்டைக்கோஸ், உருளை கிழங்கு, சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் சரிந்து இருக்கிறது. இதுதவிர பெரும்பாலான காய்கறிகள் ஒரு கிலோ ரூ.20-க்கும் கீழாகவே விற்பனையாகி வருகிறது.
டீக்கடைகள் அடைப்பால் பஜ்ஜி மிளகாய், வாழைக்காய் குப்பையில்
ஓட்டல்களை போல் டீ கடைகளும் பெருமளவு மூடப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடால் தற்போது டீ கடைகளில் டீ மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் கடைகளில் வடை, பஜ்ஜி போடப்படுவது நின்றுள்ளது. இதனால் மிளகாய், வாழைக்காய் போன்றவை வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் கொட்டும் நிலை இருக்கிறது, விலையை எவ்வளவு குறைத்தாலும் வாங்க ஆள் இல்லாத நிலை நீடிப்பதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சிலிண்டர் நிலைமை சீரடையும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்பதால் கலக்கத்தில் உள்ளனர்.
கோயம்பேடு காற்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) விவரம்:- பல்லாரி - ரூ.14 முதல் ரூ.22 வரை, தக்காளி - ரூ.8 முதல் ரூ.15 வரை, உருளைக்கிழங்கு - ரூ.10 முதல் ரூ.15 வரை, கேரட் - ரூ.12 முதல் ரூ.30 வரை, பீன்ஸ் - ரூ.30 முதல் ரூ.50 வரை, பீட்ரூட் - ரூ.15 முதல் ரூ.25 வரை, சௌசௌ - ரூ.13 முதல் ரூ.15 வரை, முட்டைக்கோஸ் - ரூ.8 முதல் ரூ.10 வரை, வெண்டைக்காய் - ரூ.25 முதல் ரூ.30 வரை, கத்தரிக்காய் - ரூ.15 முதல் ரூ.25 வரை, சுரைக்காய் - ரூ.10 முதல் ரூ.15 வரை, முருங்கைக்காய் - ரூ.30 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் - ரூ.20 வரை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications