பாஜகவின் பகீர் திட்டம்.. நடக்கவே கூடாது.. ‘நீங்க வாங்க’- ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த வேல்முருகன்
சென்னை : பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க நாடெங்கிலும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு எதிரான பாஜக கூட்டணியை வீழ்த்த, நாடெங்கும் பரவியுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும், ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கின்றனர் என்றும் அந்தக் கனவு பலிக்காது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மோடி அமித்ஷா கனவு
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவுமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியை நடத்தி வரும் மோடி அரசு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்காமல், 2024 பொதுத்தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக பல்வேறு வகையிலான யுக்திகளை கையாண்டு வருகிறது.

திட்டமிட்டு தடை
குறிப்பாக, மோடி அரசின் மோசமான ஆட்சியை குறித்த விமர்சனத்தை, எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் எந்த விதத்திலும் கொண்டு சேர்த்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஊழல், சகுனி, சர்வாதிகாரி, திறமையற்றவர், கபட நாடகம், பொய், போலித்தனம், பாலியல் வன்முறை உள்ளிட்டு பல சொற்கள் விவாதங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. மீறிப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, மோடியையும் பா.ஜ.க ஆட்சியையும் விமர்சனம் செய்கின்ற சொற்களை பொறுக்கியெடுத்து தடைவிதிக்கப்பட்டது.

ஊடகங்களை முடக்க திட்டம்
இது ஒருபுறமிருக்க, 2024 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்துள்ள மோடி அரசு, பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் தி வயர், குவிண்ட் போன்ற முற்போக்கு - ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் இணைய ஊடகங்களை ஒடுக்குவதற்கான பணிகளையும் முடக்கி விட்டுள்ளது.

அம்பலப்பட்டு நிற்கும் மோடி
பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என பல்வேறு சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்கள் வெளிப்படுத்தியதன் விளைவான நாட்டு மக்கள் முன்பாக அம்பலப்பட்டும் நிற்கும் மோடி அரசு, இணைய ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், அந்த ஊடகங்களை ஒடுக்க வேண்டும். இதுவே, மோடி அரசின் நோக்கமாக உள்ளது.

சமூக ஊடகங்களை ஒடுக்கும் மோடி அரசு
இதற்காகவே, அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022-ஐ, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்திருந்தது. இதன் வாயிலாக, இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக, மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழும் சமூக ஊடகங்களை, கண்காணிக்கவும் ஒடுக்கவும் மோடி அரசு களம் இறங்கியுள்ளது.

ஸ்டாலினுக்கு கோரிக்கை
தனது சர்வாதிகாரம், பாசிச ஆட்சி குறித்த விமர்சனத்தை, ஜனநாயக சக்திகள் நடத்தும் இணைய ஊடகங்கள் அம்பலப்படுத்தாவிட்டால், 2024 பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள், மீண்டும் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிரான பாஜகவின் தேர்தல் கூட்டணியை வீழ்த்த, நாடெங்கும் பரவியுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும், ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications