சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹேய்.. இது "டி-20 அரசியல்".. எல்லாமே லைட்னிங்தான்.. திமுகவுக்கும் நல்லது.. இதுதான்டா அந்த "ஸ்கெட்ச்"

உதயநிதிக்கு அமைச்சர் பதவியை திமுக மேலிடம் மிக சரியாகவே வழங்கியுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மிக குறுகிய காலத்தில் உதயநிதிக்கு பொறுப்பு தந்து விட்டார்கள்.. அனுபவம் இல்லை.. வாரிசு அரசியல்.. ப்ளா ப்ளா என்று பலரும் புலம்பி வருகின்றனர். ஆனால் திமுக போட்ட "ஸ்கெட்ச்"சுகளிலேயே மிகப் பிரமாண்டமான, அடடே போட வைக்கும் அட்டகாசமான "அட்டாக்" இதுதான் என்பதை நாம் சொல்லியாக வேண்டும்.

கிரிக்கெட்டில் முன்பு டெஸ்ட் தான் பிரபலமாக இருந்தது.. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இடம் கிடைத்தாலே அதை வாழ்நாள் சாதனையாக சொல்லிக் கொண்டனர் வீரர்கள்.

டெஸ்ட் வீரர் என்றால் ஒரு கெளரவமும், அந்தஸ்தும் சேர்ந்தே கிடைத்தது.. டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு சிக்கலாக வந்து சேர்ந்தது ஒரு நாள் போட்டி.. அது வந்ததும் டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறையும் என்று பரவலாக எல்லாருமே கூறினார்கள்.

உதயநிதியை வாழ்த்திய மதன் கவுரி.. நன்றி சொன்ன திமுக ராஜீவ்! தகர்ந்த “சீக்ரெட்” -அப்போ அந்த துறை தானா?உதயநிதியை வாழ்த்திய மதன் கவுரி.. நன்றி சொன்ன திமுக ராஜீவ்! தகர்ந்த “சீக்ரெட்” -அப்போ அந்த துறை தானா?

 50 50 ஓவர்

50 50 ஓவர்


ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் வீரர்கள், ரசிகர்களிடையே ஒரு நாள் போட்டி புதிய கவர்ச்சியை பெற்றது. ஆட்டத்திலும், ரசிப்பிலும் வேகம் கூடியது... ஒரு நாள் போட்டிகளிலும் பின்னர் மாற்றங்கள் வந்தன. ஓவர்களை குறைத்து 50 ஓவர்களாக்கினர். இந்த ஒரு நாள் போட்டியும் பின்னர் புதிய மாற்றம் கண்டது.. அதுதான் டி20 போட்டிகள்.. இது வந்ததும் கிரிக்கெட்டின் முகமே மாறிப் போனது. ரசிகர்களும் பல மடங்கு அதிகமாகி விட்டனர். இன்று டி 20 போட்டிகளுக்கு இருக்கும் கிரேஸ் உலகம் அறிந்தது. கிரிக்கெட்டே விளையாடாத நாடுகளும் கூட அதை விளையாட விருப்பப்படுகின்றன.

 டி-20 கேம்

டி-20 கேம்

காரணம், டி20 போட்டிகளின் மவுசு அப்படி.. வந்தோமா, அடித்தோமா,, அட்டாக் பண்ணோமா.. ஜெயிச்சோமா என்று போய்க் கொண்டே இருக்கலாம்.. டி20யில் வேகத்தைக் காட்டலாம், விவேகத்தையும் காட்டலாம்.. கூடவே சாதனைகளையும் வாரிக் குவிக்கலாம்.. உதயநிதி ஸ்டாலினை நாம் இந்த இடத்தில்தான் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது... பக்குவமும், நிதானமும், முதிர்ச்சி செயல்பாடுகளும் மட்டுமே அரசியல் என்றில்லாமல், அதிரடியையும் உள்ளே புகுத்த வேண்டி உள்ளது.. அண்ணா, கருணாநிதி ஆகியோரை டெஸ்ட் கிரிக்கெட் என்று எடுத்துக் கொள்ளலாம்... அவர்களின் தரமே வேறு, அதன் மவுசே வேறு.. ஆனால் காலம் மாறும்போது காட்சிகளும் மாறும் அல்லவா?

 கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

அதுபோலத்தான் ஸ்டாலினின் வருகையும் அமைந்தது.. அவரையும் ஒரு நாள் போட்டியாகவே நாம் கருதலாம்.. ஆனால் இதுதான் இளைஞர்களின் டி20 காலமாயிற்றே.. அப்படித்தான் டி 20 கிரிக்கெட் போல வந்து சேர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.. உதயநிதி ஸ்டாலினின் வருகையும் சரி, அவரது உயர்வும் சரி கிட்டத்தட்ட டி 20 கிரிக்கெட்டுக்கு சமமாகவே பார்க்கலாம்.. ஒரு கிறிஸ் கெய்ல் போல.. ஒரு ஏபி டி வில்லியர்ஸ் போல.. அதிரடி காட்டுகிறார் உதயநிதி. வெறும் கருணாநிதி குடும்பத்து வாரிசு என்று அவரை அடக்க முயன்றால் அதை விட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.. வாரிசு என்ற ஒற்றை தகுதியை வைத்து, அரசியலுக்கு வந்தவர்கள் எத்தனை பேர் நீடித்து நின்றுள்ளார்கள்? சாதித்துள்ளார்கள் என்பதை மக்களும் ஒவ்வொன்றாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், வாரிசு அரசியல் என்பதை வைத்து இனியும் யாரும் கூப்பாடு போட முடியாது..

 திணற திணற

திணற திணற

தனது திறமையை ஒவ்வொரு சான்ஸிலும் ஆணித்தரமாக நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறார் உதயநிதி.. அவரது ஆட்டத்திறமையும் ஒவ்வொரு முறையும் வேற லெவலுக்கு போய்க்கொண்டேதான் இருக்கிறது... திமுகவை பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சவால்களை சந்தித்துக் கொண்டுள்ளது. பாஜகவினரின் பலமுனை முற்றுகை கட்சியை திணறடித்துக் கொண்டுள்ளது. பழைய உத்திகள் எதுவும் பலிக்கவில்லை. திராவிடத்தை மட்டுமே வாய்வலிக்க பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்ற நிலையை நோக்கி அரசியல் இன்று நகர ஆரம்பித்துள்ளது..

 துணிவு வாரிசு வலிமை

துணிவு வாரிசு வலிமை

எனவே உதயநிதியை வைத்து சற்று அதிரடி ஆட்டம் காட்ட திமுக பிளான் போட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.. அதிமுகவின் தற்போதைய நிலை, பாஜகவின் நெருக்கடிகள், தமிழக அரசியலை சுற்றியுள்ள சவால்கள் போன்றவைகளையும் கணக்கிட்டே திமுக மேலிடம் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் என தெரிகிறது.. அதற்கு பொருத்தமாக, உதயநிதியை வைத்து இளைஞர் பட்டாளத்தை வளைக்கும் திமுகவின் மெகா ஸ்கெட்ச் தான் இது.. இது பலித்தால், நிச்சயம் வரும் தேர்தலில் திமுக மேலும் "வலிமை"யுடன்.. "துணிவு"டன்.. தனது "வாரிசு"ன் உதவியால்.. காவியை ஒரு கை பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்..!!

English summary
Very good decision + Best Choice by CM MK Stalin and Udayanidhi's action politics is needed today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X