நீலகிரி, கோவையில் மிக கனமழை..23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்க்குமாம்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல ஊர்களில் நேற்றைய தினம் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. பல ஊர்களில் கனமழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட்ம் புடலூர், சேலம் டேனிஷ்பேட்டையில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. ஈச்சன்விடுதியில் 16 செமீ, எடப்பாடியில் 15 செமீ மழை பதிவாகியுள்ளது.

ராசிபுரம், ஜம்புகுட்டப்பட்டி பகுதியில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி, அரியலூரில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. பட்டுக்கோட்டை, வல்லம், அதிராம்பட்டினம், அரியலூர் பகுதியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
சிட்டம்பட்டி, ஆண்டிப்பட்டி, தண்டராம்பேட்டை, வீரகனூர், கள்ளக்குறிச்சி, ஆரணி , கிளென்மார்கன், ஜெயம்கொண்டம், விருதுநகர் பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மிக கனமழை பெய்யும்

மிக கனமழை பெய்யும்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23 மாவட்டங்களில் கனமழை

23 மாவட்டங்களில் கனமழை

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மூன்று நாட்களுக்கு கனமழை

மூன்று நாட்களுக்கு கனமழை

23ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 24ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை

25 மற்றும் 26ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 மீனவர்களுக்கான முன்னறிவிப்பு

மீனவர்களுக்கான முன்னறிவிப்பு

இன்றைய தினம் குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். : தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று வீசும்

சூறாவளிக்காற்று வீசும்

24ஆம் தேதியன்று இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25ஆம் தேதியன்று குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26ஆம் தேதியன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+