வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவும் விஜய் மக்கள் இயக்கம்.. குவியும் பாராட்டு!
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டியது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன.
Recommended Video
நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்கியது. இதேபோல் டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென் மண்டலம் என அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.

விஜய் மக்கள் இயக்கம்
தொடர் மழையால் பல மாவட்டங்களில் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். இதேபோல் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

கலைக்கூத்தாடிகள் பாதிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் 65 கலைக்கூத்தாடி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததாலும் அண்மையில் பெய்த தொடர் மழையால் கலைக்கூத்தாடிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு போதிய உணவு வசதி இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்

மளிகை பொருட்கள், காய்கறிகள்
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் 21-ம் ஆண்டு கலையுலக பயணத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பரணிபாலாஜி தலைமையில் அந்த அமைப்பினர் வெள்ளையூரில் உள்ள 65 கலைக்கூத்தாடி குடும்பத்திற்கு தேவையான ஒரு மூட்டை அரிசி 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை அடங்கிய சிறப்பு தொகுப்பை வழங்கினர்

விஜய் உத்தரவு
அண்மையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் நடிகர் விஜய்யை சந்தித்தபோது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாது விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள அனைவரும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications