என்டிஏ கூட்டணியில் இணைய.. விஜய்க்கு அழுத்தம் இருக்கு! ஓபனாக உடைத்து பேசிய திருச்சி சூர்யா
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. என்டிஏ கூட்டணி, தனது பலத்தை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டணியில் விஜய்யை சேர்க்க அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்தும், கூட்டணி குறித்தும் திருச்சி சூர்யா, ஒன் இந்தியா தமிழ் யூடியூப் தளத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
பேட்டியில் அவர் பேசியதாவது, "உதயசூரியன் மறைந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். ஆனால், உண்மையில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இந்த அளவுக்கு பலம் இருக்கிறதா? என்பதே தற்போதைய கேள்வி.

தேமுதிகவின் நிலை
பாஜகவை பொறுத்தவரை ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் வரும்போதும், 3 மாநிலங்களுக்கு தேர்தல் ஒன்றாக வரும். அதில் பெரும்பாலும் 2 மாநிலங்களில் பாஜக அதிகாரத்திற்கு வந்துவிடும். ஆனால், இந்த முறை தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் என இந்த 3 மாநிலங்களிலும் பாஜக அதிகாரத்தில் இல்லை.
எனவே நீண்ட காலம் வெயிட் செய்ய முடியாது. உடனடியாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று, மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதனால்தான் நேற்றைய கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் இருந்தனர்.
அதேபோல தங்கமணியும், சிவி சண்முகமும் நேற்று தேமுதிகவுடைய தலைவர் பிரமலதாவை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரோ.. மோடி வந்தால் எனக்கென்ன? ராஜ்ய சபா சீட்டுக்கு ஓகே சொல்லுங்கள் நான் வருகிறேன்" என்று கூறிவிட்டார். பிரேமலாத பாஜகவை மதிக்கவில்லை என்பது, அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல விஜய் இன்று மேடைக்கு வரவில்லை என்றாலும்.. அடுத்த 2 மாதங்களில் மேடைக்கு வரவைத்து விட பாஜக முயன்று வருகிறது.
வாக்கு வங்கி
அதேபோல மேடையில் உள்ள தலைவர்கள் பலம் கொண்டவர்களா? என கேட்க தோன்றுகிறது. டிடிவி தினகரன் தனித்து நின்றது 2021ல் திமுக வெற்றிக்கு உதவியதாக சொல்லப்பட்டது. இன்று அவர் கூட்டணியில் இணைந்துள்ளார். அப்போது இருந்த வாக்கு வங்கி.. இன்றும் அப்படியே இருக்குமா என்பது சந்தேகமே!
'அம்மா ஆட்சியை' 2026-ல் மீண்டும் பிடிப்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்த போதிலும், அவரது அரசியல் நிலைப்பாடு கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அ.ம.மு.க., அ.தி.மு.க.வின் 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பாதித்து தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்ததாகவும், 2019-ல் 5% வாக்கு வங்கி பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் தேனி, திருச்சி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
முக்குலத்தோர் சமூகம்
திருச்சி வேட்பாளர் செந்தில்நாதன் தனது சொந்த வீட்டையே 7.5 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து இழந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவரது முடிவுகளால் நம்பி வந்த பல தொண்டர்களை தினகரன் கடனாளிகளாக்கிவிட்டதாகவும், சசிகலாவைத் துரோகி என விமர்சித்த அதே தினகரன், இன்று அவரிடம் இருந்து பிரிந்தவர்களுடன் கூட்டணி அமைப்பது முக்குலத்தோர் சமூகத்தினரிடேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. கூட்டணிக்கு வந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2024-ல் தனித்தனியே போட்டியிட்ட கட்சிகள் தற்போது இணைந்திருப்பதால், 40% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியும் என கூட்டணித் தலைவர்கள் கணக்கிட்டுள்ளனர். பா.ம.க.வின் வன்னியர் சமுதாய வாக்குகளும், அ.ம.மு.க.வின் முக்குலத்தோர் வாக்குகளும் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. அதே சமயம், பா.ம.க.வின் தலைவர் அன்புமணி ராமதாஸ், குடும்ப அரசியலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீறுவதாகவும், 10.5% இட ஒதுக்கீடு குறித்த வாக்குறுதி தேர்தல் லாப நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
டிடிவி தினகரன்
கூட்டணியில் அங்கம் வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், தி.மு.க.வின் ஊழல் குறித்து இவர்கள் விமர்சிப்பது நகைப்புக்குரியது என்று பேச்சாளர் குறிப்பிட்டார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்தை 'துரோகிகள்' என்று விமர்சித்துப் பேச, இன்று அதே குடும்பத்தைச் சேர்ந்த தினகரனுடன் அவர் இணைந்திருக்கிறார்.
திமுகவின் பலம்
மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அடையாளமின்றி செயல்படும் பா.ஜ.க., நட்சத்திரங்கள் அல்லது சாதி அடிப்படையிலான கட்சிகளை மட்டுமே இழுக்க முயற்சிக்கிறது என்றும், இது ஒரு பலவீனமான கூட்டணி என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் குறிப்பிட்ட சாதிப் பின்னணியை கொண்டிருக்கவில்லை என்பதையும், சிறுபான்மை பலம் இயல்பாகவே தி.மு.க.வைச் சென்றடையும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொண்டர்களின் நம்பிக்கை
ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு பலர் சென்றது போல, அ.ம.மு.க.வில் இருந்தும் பலர் தி.மு.க.வை நோக்கிச் செல்கின்றனர். டி.டி.வி. தினகரனின் தவறான முடிவுகளால் தொண்டர்கள் வெளியேறுகின்றனர். "ஒரு ஜாதிக்காரன் என் முன்னாடி எப்படி முழிப்பேன்?" என்று கட்சியிலிருந்து வெளியேறிய ஒரு துணைச் செயலாளர் கூறியதாக அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளில் பிழை இருப்பதால், அவர்கள் மீதுள்ள நம்பிக்கையைத் தொண்டர்கள் இழந்துள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை. ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக வலுவான எதிர்மறை அலை இல்லை. மேலும், "மோடி தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நன்மைகளை செய்தபோதும், எடப்பாடி ஏன் அதை ஏற்க மறுத்தார்?" போன்ற கேள்விகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருமித்த நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன. கேமராவை அணைத்துவிட்டு, வாக்காளராக எடப்பாடி அல்லது ஸ்டாலின் என்று கேட்டால், மக்கள் ஸ்டாலினுக்குத்தான் வாக்களிப்பார்கள்.
ஜெயிக்கப்போவது திமுகதான்
போதைப்பொருள் ஒழிப்பு, ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்கள் போன்றவை, மாநில அரசால் திறம்பட கையாளப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் கட்டுக்குள் இருக்கிறது. ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் தாமரை மலராது, தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பலன் தராது.
மொத்தத்தில், இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, சாதி வாக்குகள், சுயநலம் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு பலவீனமான கூட்டணி. இது ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை அகற்ற எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை" என்றும் திருச்சி சூர்யா கூறியுள்ளார்.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications