• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அத்தாரு.. உத்தாரு.. மொத்தமா வழிச்சுட்டுப் போயிருச்சே.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "ஹோஹோய்"தான்!

|

சென்னை: விஜயகாந்த் நாக்கை துருத்தினாலும், கண்களை சிவக்க வைத்தாலும் கேட்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் அவர் எப்போது கட்சி பொறுப்பை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தாரோ அன்று முதல் அக்கட்சி தேய்பிறையானது!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இக்கட்சியின் வாக்கு சதவீதம் 0.43 சதவீதமாகும். அதாவது நோட்டாவை காட்டிலும் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தையே தேமுதிக பெற்றது.

அது போல் தமிழகம் முழுவதும் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளை பார்த்தோமேயானால் 1,95,910 ஆகும். அதாவது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பெற்ற 2.2 லட்சத்தைவிட குறைவாக தேமுதிக பெற்றுள்ளது.

மநீமவை விட கெத்து காட்டிய அமமுக.. இரண்டு பேரும் சேர்ந்து செய்த தரமான சம்பவம் மநீமவை விட கெத்து காட்டிய அமமுக.. இரண்டு பேரும் சேர்ந்து செய்த தரமான சம்பவம்

கோட்டை

கோட்டை

தேமுதிகவின் இந்த சரிவிற்கு காரணம் என்ன? என்பது குறித்து தொண்டர்கள் தற்போது பேசி வருகிறார்கள். கேப்டன் கட்டி வைத்த கோட்டையை அவரது மகன் விஜய பிரபாகரன் தேவையில்லாமல் பஞ்ச் பேசி பேசியே நட்டாற்றில் நிறுத்திவிட்டார் என்கிறார்கள்.

வேதனை

வேதனை

2014, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தனது கட்சியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து சிறிதும் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடி பேசி தற்போது நேரிலும் சமூகவலைதளங்களிலும் கேலி பேச்சுக்கு ஆளாகியுள்ளதாக தொண்டர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

அனுபவம்

அனுபவம்

பண்ருட்டியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேசிய பேச்சு அக்கட்சி மீது சொந்த கட்சியினரே வெறுப்படைய வைத்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் அரசியல் அனுபவத்தை கூட தனது வயதாக கொண்டிருக்காமல் அவர் பேசிய பேச்சு இருக்கே அப்பப்பா..

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அவர் பேசியது இதுதான் "என்ன எடப்பாடி எடப்பாடி அவர் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா. எடப்பாடி தொகுதியிலேயே பழனிச்சாமி மண்ணை கவ்வுவார். எதிர்க்கட்சியாக கூட அதிமுக உட்காராது. இனி தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேமுதிக இருக்கும்" என இஷ்டத்திற்கு அடித்துவிட்டார்.

சரிக்கு சரி

சரிக்கு சரி

ஆனால் இவற்றிற்கு சரிக்கு சரி எந்த பதிலையும் சொல்லாமல் எடப்பாடியில் பழனிச்சாமி வென்றார், தற்போது அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றுவிட்டது. யாகாவராயினும் நா காக்க என திருவள்ளுவரின் குறளுக்கேற்ப செயல்பட வேண்டும்.

செல்வாரா

செல்வாரா

இனிமேல் என்னுடைய ஆக்ஷன் எப்படி இருக்கும் பாருங்க என உதார் விட்ட விஜய் பிரபாகரன் பேச்சை குறைத்து விட்டு ஆக்ஷனில் இறங்கியிருக்கலாம். வயதிற்கு ஒவ்வாத பேச்சு, கைதட்டலுக்காக கண்டதை பேசுவது என இருந்தால் எப்படி? இனியாவது நாவடக்கம் செய்து தேமுதிகவை வளர்ச்சி பாதைக்கு சப்தமில்லாமல் கொண்டு செல்வாரா? ஹோஹோய்!

English summary
DMDK Vijayaprabakaran should learn lesson from these failures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X