டமால்.. டுமீல்.. அடுத்த ஒரு மணி நேரம் முக்கியம்.. 4 மாவட்டங்களில் வெளுக்கபோகும் மழை.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தமிழகத்தில் மழை நிலவரம், மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18ம் தேதி வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாள் மிதமான மழை
இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு மணி நேரம் மழை
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இன்று காலை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications