சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று சுபமுகூர்த்த நாள்... உறவுகள் இல்லாத திருமணம்... முழு ஊரடங்கால் தவித்த மணமக்கள் வீட்டார்..!

Google Oneindia Tamil News

சென்னை: சுபமுகூர்த்த நாளான இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் உறவினர்கள் இல்லாத சூழலிலேயே திருமணங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அந்த வகையில் முழு ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காவல்துறையினரின் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக உள்ளன.

Weddings held without relatives due to full curfew

இதனிடையே இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், இன்றைய தினம் அதிகமான திருமணங்களை நடத்த மணமக்கள் வீட்டார் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக மண்டப முன்பதிவு தொடங்கி சமையல்காரர்கள், வீடியோகிராபர்கள் என பலருக்கும் அட்வான்ஸ் தொகையை கூட கொடுத்து வைத்திருந்தனர்.

Recommended Video

    கடலூர்: கொரோனா முழு ஊரடங்கு எதிரொலி... கோயில் வாசல் முன் நடந்த திருமணங்கள்!

    இந்நிலையில் தமிழக அரசின் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த மணமக்கள் வீட்டார், செய்வதறியாது திகைத்தனர். ஒரு சிலர் திருமண பத்திரிகைகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்றனர்.

    Weddings held without relatives due to full curfew

    இருப்பினும் தாங்கள் நினைத்தபடி தங்கள் பிள்ளைகளுக்கு உற்றார்-உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் மணமக்கள் வீட்டாருக்கு இருந்ததை காண முடிந்தது. இதனிடையே நேற்று மாலை வெளியான புதிய அறிவிப்பில், கூட்ட அரங்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா பிடியில் பெங்களூரு.. ஒரே மாதத்தில் 1,000 பேர் உயிரிழப்பு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்! கொரோனா பிடியில் பெங்களூரு.. ஒரே மாதத்தில் 1,000 பேர் உயிரிழப்பு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!

    கொரோனாவின் தீவிரம் குறைய இன்னும் ஒரு மாதம் கூட ஆகலாம் என்பதால் அதுவரை இன்னும் பல புதிய கட்டுப்பாடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Weddings held without relatives due to full curfew
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X