இலை இருக்கும் வரை தான் மரியாதை.. 4 பேர்.. ‘முடிவெடுங்க’- எடப்பாடிக்கு முக்கிய புள்ளி கொடுத்த ஆலோசனை!
சென்னை : எடப்பாடி பழனிசாமி சில நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டிருக்கக் கூடாது என்றும், இனிமேலாவது எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆக்ஷனில் இறங்கக்கூடாது என்றும் பாஜக மேலிடத்தோடு தொடர்புள்ள ஒரு முக்கிய புள்ளி அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம்.
பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வந்த தீர்ப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக அதிமுக அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றுள்ளனர். மேலும், பலரும் ஓபிஎஸ் பக்கம் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, கட்சியை கைப்பற்ற முடிவெடுத்தபோதே டெல்லியின் தயவை நாடியிருக்க வேண்டும், உடன் இருக்கும் நிர்வாகிகள் பேச்சைக் கேட்டுக்கொண்டு செயல்பட்டிருக்கக் கூடாது என பாஜகவுக்கு நெருக்கமான புள்ளி ஒருவர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கிறாராம்.

தீர்ப்புக்குப் பிறகு
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு இடியாக வந்து இறங்கியது. தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். சசிகலா, தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உடன் ஒருபோதும் இணைந்து பணியாற்ற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது.

களமிறங்கிய முக்கிய தலைகள்
இந்த நிலையில் தனக்கு கிடைத்த சாதகமான விஷயத்தைப் பயன்படுத்தி அதிமுகவை கைப்பற்றும் முடிவில் ஓபிஎஸ் இறங்கியுள்ளார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஈபிஎஸ் ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் கடும் அப்செட்
கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் சைலண்ட் ஆகியிருப்பதும், ஓபிஎஸ் தரப்பு பலருடனும் பேசி வருவதாக வரும் தகவல்களும் எடப்பாடி பழனிசாமியை அப்செட் ஆக்கியுள்ளன. எனினும், முன்வைத்த காலை பின் வைக்க முடியாது, என்னதான் நடக்கிறதென மோதிப் பார்த்துவிடலாம் என்ற முடிவில் தான் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. தீர்ப்பு ஒருவேளை பாதகமாக வந்தாலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் தயாராகி வருகிறாராம்.

பாஜகவுக்கு நெருக்கமான புள்ளி
இந்நிலையில், பாஜகவுடன் நெருக்கமான புள்ளி ஒருவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பெர்சனலாக பேசுவதாகக் கூறிக்கொண்ட அவர், பாஜக தலைமையின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இணக்கமாகச் செல்வதற்கான திட்டம் இருக்கிறதா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளார். ஆனால், ஈபிஎஸ், இனி அப்படி இறங்கினால், நான் பலவீனமடைந்ததாக ஆகிவிடும், அந்த முடிவை எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அந்த 4 பேர்
அதற்கு அந்தப் புள்ளி, நீங்கள் கட்சியை கைப்பற்ற முடிவெடுத்தால், அப்போதே டெல்லியில் பாஜக தலைமையின் தயவை நாடியிருக்க வேண்டும். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் திடீரென நீங்கள் இப்படி மோதலில் இறங்கியது டெல்லிக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. உங்களுடன் இருக்கும் 4 பேரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக இந்த விஷயத்தில் இறங்கி இருக்கக்கூடாது எனத் தெரிவித்தாராம்.

சின்னத்திற்கு சிக்கல் வந்தால்
மேலும், இப்போது நீங்கள் உறுதியாக இருந்தாலும் கூட, அடுத்த தீர்ப்பும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தால் இன்னும் பலர் தாவி விடுவார்கள். தேர்தல் ஆணையத்தில் சின்னம் முடங்கவும் வாய்ப்பு உள்ளது. சின்னம் உங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைதான் நிர்வாகிகள் உங்களுடன் இருப்பார்கள். இரட்டை இலைக்கு பிரச்சனை வந்துவிட்டால் சிக்கல் தான்.

மனதில் வையுங்கள்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரிடமும் இரட்டை இலை சின்னம் இல்லை என்றால், பாஜகவில் சேர்ந்து தாமரை சின்னத்தில் நிற்கவும் அதிமுக நிர்வாகிகள் தயங்க மாட்டார்கள். திமுகவும் பலரை ஈர்க்க காய்நகர்த்தி வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். 2024 தேர்தலை மனதில் கொண்டு செயல்படுங்கள். அதைத்தான் பாஜகவும் விரும்புகிறது. நீங்கள் இணைந்து செயல்பட விரும்பினால், அதற்கான வேலைகளை பாஜகவே பார்த்துக்கொள்ளும். உங்களுக்கு எந்த நஷ்டமும் வராது என அந்த முக்கிய புள்ளி அட்வைஸ் செய்துள்ளாராம்.
-
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications