Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கொடுமை இது? தியேட்டருக்கு வெளியே "கூல் சுரேஷ்" செய்த சம்பவம்..தமிழக அரசுக்கு பறந்த பரபர மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெந்து தணிந்தது காடு படம் பார்த்த பின் கூல் சுரேஷ் தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியது.

மத்தவங்க படம் வாந்தாலே.. ஆட்டம் போடும் குணம் கொண்டவர் கூல் சுரேஷ். தான் கடவுளாக நினைக்கும் சிம்புவின் படம் வந்தால் சும்மாவா இருப்பார்! காலை 4 மணி காட்சிக்கு 3 மணிக்கெல்லாம் வந்து ரகளையை ஆரம்பித்துவிட்டார் கூல் சுரேஷ்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் இன்று வெளியாகி உள்ளது. காலையில் இருந்து படத்திற்கு பெரிய அளவில் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வந்தபடி உள்ளன.

 கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் பொதுவாகவே போகிற இடங்களில் எல்லாம் வெந்து தணிந்தது காடு.. சிம்புவிற்கு வணக்கத்தை போடு என்று கூறுவதுதான் வழக்கம். இந்த நிலையில் இன்று படம் வருகிறது என்று தெரிந்ததும் அதிகாலை 3 மணிக்கே தியேட்டர் வாசலில் இவர் காத்து இருந்தார். தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ் எப்போதும் போல இன்றும் தியேட்டர் வாசலில் ரகளை செய்துவிட்டு, சிம்புவை பற்றி புகழ்ந்து கத்திவிட்டு உள்ளே செல்ல முயன்றார்.

கார் கண்ணாடி

கார் கண்ணாடி

அங்கே நிலவிய கூட்டத்தில் அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்த யாரோ தள்ளிவிட பலர் கார் மீது விழுந்ததில் கண்ணாடி உடைந்தது . அப்போது கூல் சுரேஷ் கார் உள்ளேதான் இருந்தார். கார் கண்ணாடி உடைந்த டென்ஷனில் யார் பார்த்த வேலைப்பா இது.. சிம்பு ரசிகர்களா இப்படி செய்வது.. எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் கேட்டார். அதன்பின் சினிமா பார்க்க சென்றார்.

 அபிஷேகம்

அபிஷேகம்

படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கூல் சுரேஷ்.. அங்கேயே தலையில் தண்ணீர் ஊற்றி வினோதமாக கொண்டாடினார். இவர் செய்ததை பார்த்து அங்கு இருந்த சிம்பு ரசிகர்கள்.. என்னங்க கொடுமை இது.. என்ன இவர் இப்படி செய்கிறார் என்று விசித்திரமாக பார்த்தனர். ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து அதை தலையில் மாறி மாறி ஊற்றி கூல் சுரேஷ் கொண்டாடினார். கேமரா முன்பு நின்று கூல் சுரேஷ் இப்படி செய்தது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

தமிழக அரசு

தமிழக அரசு

தனக்கு தானே அபிஷேகம் செய்து கொண்ட கூல் சுரேஷ்... பின்னர் தமிழ்நாடு அரசுக்கு ஒரு மெசேஜும் அனுப்பினார். நான் இந்த படத்திற்காக அரசிடம் லீவ் கேட்டு இருந்தேன். பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ் கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். அதை பலர் விமர்சனம் செய்து இருந்தனர். நான் என் கருத்துக்கு வருத்தம், மன்னிப்பு கேட்கிறேன். நான் சிம்பு மேல் இருக்கும் பாசத்தில் சொன்னேன். மற்றபடி யாரையும் கெடுத்து குட்டி சுவராக்க வேண்டும் என்று இப்படி செய்யவில்லை, என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+