Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா டிசம்பர் 4ல் இறந்தது உண்மையா? அன்று மாலை நடந்த ‘சம்பவம்’- டிடிவி தினகரன் சொன்ன புதிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது, ஏன் அடுத்த நாள் அவரது மரணம் அறிவிக்கப்பட்டது என டிடிவி தினகரன் விளக்கியுள்ளார்.

ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்ததாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி என்ன நடந்தது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ரிப்போர்ட்

ஆறுமுகசாமி ரிப்போர்ட்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. 608 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சிகிச்சை பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ள ஆணையம், ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை, மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராமல் தடுக்கப்பட்டது, சசிகலாவே ஒட்டுமொத்தமாக கண்ட்ரோலில் வைத்திருந்தார் என அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜெயலைதா இறந்தது எப்போது?

ஜெயலைதா இறந்தது எப்போது?

மேலும், ஜெயலலிதா இறந்த நாள் தொடர்பாகவும், ஷாக் தகவலை வெளிப்படுத்தியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்திருக்கலாம் என சாட்சியங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 டிசம்பர் 4

டிசம்பர் 4

இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி 3.50 மணிக்கு அவரது சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும், டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை, இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்களாக இருக்கிறது என்றும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ஜெயலலிதா இறந்தது என்றைக்கு என மீண்டும் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்துப் பேசியுள்ளார். இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்ததாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

டிசம்பர் 4ல் நடந்தது என்ன?

டிசம்பர் 4ல் நடந்தது என்ன?

அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "டிசம்பர் 4 மாலையில் நான் அங்கு இல்லை. ஜெயலலிதாவுக்கு தீவிரமான மாரடைப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்தது. நான் அங்கு சென்று சேர்வதற்கு 6.30 மணி ஆகிவிட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டால் என்னென்ன சிகிச்சைகளை மேற்கொள்வார்களோ அதையெல்லாம் செய்து வந்தார்கள். பின்னர், கடைசி முயற்சியாக எக்மோ கருவியை பொருத்தினார்கள்.

மாரடைப்பு ஏற்பட்டதே மரணமா?

மாரடைப்பு ஏற்பட்டதே மரணமா?

எக்மோ பொருத்திய பிறகு 24 மணி நேரம் உடல் நிலையைக் கண்காணிப்பார்கள். மருத்துவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் 48 மணி நேரம் கூட பார்ப்பார்கள். அதன் பிறகு மருத்துவர்கள் அனைவரும் பார்த்து ஆலோசித்து ஜெயலலிதாவின் மரணத்தை இரவில் அறிவித்தார்கள். அதுதான் உண்மையில் நடந்தது. மாரடைப்பு ஏற்பட்டதையே மரணம் என்று ஆறுமுகசாமி ஆணையம் சொல்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை இதுதான்

உண்மை இதுதான்

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கொடுத்துள்ள அறிக்கை ஏதோ அரசியல்வாதி கொடுத்துள்ள அறிக்கை போல் உள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல மதிப்பு உள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள். ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான். எத்தனை அறிக்கை கொடுத்தாலும் உண்மை அதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+