"அந்த" ஒரு வார்த்தை.. நெஞ்சை தைத்ததுபோல.. முதல்வர் ஸ்டாலின் சொன்னாரா? என்ன நடந்தது..?

அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ள நிலையில், மிக முக்கியமான உத்தரவு ஒன்றினை காவல்துறைக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாடு 3 நாள் நடைபெற்றது..

இந்த 2 நாள் மாநாட்டிற்கும் முதல்வர் ஸ்டாலின்தான் தலைமை தாங்கினார்.. முதல்நாள் நடந்த மாநாட்டில், காவல்துறை குறித்த முக்கிய நடவடிக்கைகள் விலாவரியாக பேசினார்..

 சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

குறிப்பாக, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதை, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்... சட்டம் - ஒழுங்கு விஷயத்தில், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்... பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது.. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதிகாரிகள்

அதிகாரிகள்

நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதித்து விடக்கூடாது. கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற மக்களை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும்சரி, உடனடியாக ஒடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இதற்கு அடுத்த நாள், மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, துறை செயலர்கள், பங்கேற்றனர்.. அப்போது முதல்வர் பேசும்போது சொன்னதாவது:

 நம்பர் 1

நம்பர் 1

"தமிழகம் நம்பர் 1" என்ற நிலையை அடைய வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை, உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்... மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். அதனால், அனைவரும் நேர்மையாக, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்.. எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களை போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.. 1 ரூபாய் செலவு செய்தால்கூட, அந்த 1 ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களும் சென்றடைய வேண்டும்... அது தான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.." என்றார்.

காவல்துறை

காவல்துறை

காவல்துறைக்கும், அதிகாரிகளுக்கும், முதல்வர் இந்த கூட்டங்களில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அறிவுரைகளையும் வழங்கியிருந்தது, பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.. அத்துடன் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில், முதல்வரின் கவனம் சமீபகாலமாகவே பெருகி வருவதையும் கவனிக்க முடிந்தது.. இந்த மாநாடு, முதல்வருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மாநாடு மனநிறைவையும் தந்திருந்தது. ஆட்சியர்களும் எஸ்.பி.க்களும் உற்சாகமாக மாவட்டங்களுக்குப் புறப்பட்டு சென்றனர்.

உற்சாகம்

உற்சாகம்

ஆனால், எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும், ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது என்ற காவல்துறை அதிகார்களிடம் இருக்கிறதாம்.. அது என்ன வருத்தம் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மாநாட்டில் முதல்வரின் உரை மிக அற்புதமாக இருந்தது... அதே சமயம், ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள் என்று அவர் சொன்னதுதான் அதிகாரிகளிடம் ஒருவித உற்சாகம் மறைந்து போனது.. ரவுடிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். அப்படி சொன்னது, அதிகாரிகளை காயப்படுத்தியுள்ளது" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

தவறில்லை

தவறில்லை

இதை பற்றி நாம் திமுக தரப்பில் விசாரித்தபோது, "யாரையும் அப்படி பெயர் குறிப்பிட்டு முதல்வர் சொல்லவில்லை.. அப்படி ஒரு அவசியமும் இப்போது எழவில்லை.. துறைவாரியான அறிவுரைகளைதான் முதல்வர் வழங்கியிருக்கிறார்.. ஒரு நல்ல ஆட்சிக்கு அரவணைப்பு மட்டுமே போதாது, கண்டிப்பும் அவசியம் தேவைதானே அந்த வகையில் முதல்வர் அப்படி பேசியிருக்கலாம் அல்லது கடந்த கால ஆட்சிகளில் ஏற்பட்ட தவறுகளை வைத்து, இந்த முறை அப்படி நடந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் சொல்லியிருக்கலாம்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+