மோடியிடம் எடப்பாடி கொடுத்த ‘ரகசிய கடிதம்’ உள்ளே இருந்த மேட்டர்? ரிவீட் அதிமுகவுக்கா? - அரசியல் பரபர!
சென்னை : சமீபத்தில் சென்னை வந்து சென்ற பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரு ரகசிய கடிதத்தை மோடியிடம் கொடுத்ததாக தகவல் கசிந்தது.
அந்தக் கடிதத்தில் என்ன விவரம் இருந்தது என்பதை திமுக அரசே அறிந்து கொள்ள முடியாத நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை செய்து வரும் காரியங்களால் அதிமுக இரட்டைத் தலைமை அப்செட் ஆகியுள்ளது.
காரணம், அந்த ரகசிய கடிதத்தின் சாராம்சத்தைத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக கையில் எடுத்துக்கொண்டு விவாதித்து வருகிறாராம் என்கிறார்கள் விபரம் அறிந்த வட்டாரத்தினர்.

சென்னை வந்த மோடி
31,600 கோடி ரூபாய் மதிப்பிலான அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி கடந்த மே 26-ஆம் தேதி மாலை சென்னைக்கு வந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசிய பேச்சு பல்வேறு அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவோம்.

தனியாக சந்தித்த 5 பேர்
திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா முடிந்து டெல்லிக்குச் செல்வதற்காக விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

அந்தச் சந்திப்பில்
பிரதமர் மோடி உடனான அந்தச் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு நல்ல நடவடிக்கையாக எடுக்க வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த அறிக்கையில் என்ன விவரம் இருந்தது என்கிற விவரம் வேறு யாருக்கும் தெரியாதாம்.

உளவுத்துறை மூலம்
பிரதமரிடம் அதிமுக தலைவர்கள் அளித்த அந்த ரகசிய அறிக்கையில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை அறிய ஸ்டாலின் உளவுத்துறை மூலம் முயற்சி மேற்கொண்டு பார்த்துள்ளார். ஆனால், நேரடியாக பிரதமர் மோடியின் கையில் கொடுக்கப்பட்ட கடிதம் பற்றி வேறு அதிகாரிகளுக்கும் தகவல் தெரியவில்லை என்பதால் உளவுத்துறையால் ரகசியத்தை அறிய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

ரகசிய அறிக்கை
ஆனால், அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதில் இந்த விஷயங்கள் இடம்பெற்றிருக்கலாம் என தங்கள் யூகங்களை தெரிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி அந்தப் பட்டியலையும் பிரதமர் மோடியிடம் இருவரும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஊழல் புகார்கள்
சில ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களும் சிக்கியிருப்பதாகவும், இதை வைத்து இந்த அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையை முன்வைத்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதை சுட்டிக்காட்டியும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை சொன்னது இதைத்தானா?
அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மே 5ஆம் தேதி இரண்டு திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அறிவித்தார். இதற்குப் பின்னணியிலும், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பிரதமரிடம் கொடுத்த அந்த அறிக்கை தான் இருக்கிறது என்கிறார்கள்.

அதிமுக அதிர்ச்சி
அண்ணாமலையின் ஊழல் அமைச்சர்கள் குறித்த பேச்சால் திமுக தலைமையும், அமைச்சர்களும் ஷாக் ஆனார்களோ இல்லையா, அதிமுகவின் இரட்டைத் தலைமையான ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அதிர்ந்து போயுள்ளனர். தாங்கள், திமுக அரசை அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு கொடுத்த ரகசிய கடிதத்தில் உள்ள விஷயங்களை வைத்தே அண்ணாமலை இந்த அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறாரோ என அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் அப்செட்
ஏற்கனவே அதிமுக, பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தாங்கள், திமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தயாரித்து கொடுத்த திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், பாஜக தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறதா என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் அப்செட் ஆகியுள்ளனர். கடந்த சில நாட்களாக அதிமுக, பாஜக இடையே மோதல் முற்றி வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக்












Click it and Unblock the Notifications