சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சேலம் ஆபரேஷன்".. ஆசைகாட்டிய ஓபிஎஸ்.. அந்த 3 மணி நேரம்.. எடப்பாடிக்கு தரப்போகும் அதிர்ச்சி வைத்தியம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்கிறார்கள்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதில் விசாரணை முடிந்துவிட்டது. விரைவில் தீர்ப்பும் வர இருக்கிறது.

திமுக இந்திராணி எழுதிக் கொடுக்க.. அதிமுக ராஜ்மோகன் வாசிக்க! மாநகராட்சிக் கூட்டத்தில் நடந்த 'கூட்டணி'திமுக இந்திராணி எழுதிக் கொடுக்க.. அதிமுக ராஜ்மோகன் வாசிக்க! மாநகராட்சிக் கூட்டத்தில் நடந்த 'கூட்டணி'

சமீபத்தில் கூட்டம்

சமீபத்தில் கூட்டம்

இந்த வழக்கு விசாரணைக்கு இடையில்தான் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 300 நிர்வாகிகளுடன் மூன்றரை மணி நேரம் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சேலத்திற்கு ஓ பன்னீர்செல்வம் பொறுப்பாளர்களாக நியமித்து உள்ள நிர்வாகிகளும் வந்து இருந்தனர். இவர்களை சிறப்பாக கவனித்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு முக்கியமான சில டாஸ்க்குகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

தீர்ப்பு வரும்

தீர்ப்பு வரும்

அதன்படி அதிமுக பொதுக்குழு வழக்கு விரைவில் தீர்ப்பு வர போகிறது. சுதந்திர தினத்திற்கு பின் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். வழக்கில் நமக்கு சாதகமான சூழ்நிலையே நிலவி வருகிறது. அதனால் கவலை வேண்டாம். நீங்கள் சேலத்திற்கு திரும்ப செல்லுங்கள். அங்கே எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை நம்ம பக்கம் கொண்டு வர பாருங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கட்டளையிட்டு இருக்கிறாராம்.

ஆசைகாட்டி வருகிறார்

ஆசைகாட்டி வருகிறார்

முக்கியமாக எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரிடம் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசி வருகிறார்களாம். அந்த மூன்றரை மணி நேர ஓபிஎஸ் கூட்டத்தில் இந்த முன்னாள் அமைச்சர் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு சமீபத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக ஆத்தூர் இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதை அங்கு உள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை. அப்போதே சிலர் இதை வெளிப்படையாக எதிர்த்தனர்.

 தீர்ப்பு எப்படி வந்தாலும் மாற்றம்

தீர்ப்பு எப்படி வந்தாலும் மாற்றம்

இந்த நிலையில்தான் இப்படி அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இதற்கான சேலம் ஆப்ரேஷன் டாஸ்க்தான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாம். முக்கியமாக அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எனக்கே சாதகமாக வரும். அந்த பொதுக்குழு தீர்ப்பு வந்தால் எல்லாம் மாறிவிடுவோம். இப்போது என் பக்கம் வந்துவிடுங்கள்.

Recommended Video

    ஜெயக்குமாரை மட்டும் நாங்க சேர்த்துக்க மாட்டோம் - புகழேந்தி
     குழப்பம்

    குழப்பம்


    அப்படி நீங்கள் வந்தால் உங்களுக்கு வரும் நாட்களில் நல்ல பதவி கிடைக்கும் என்று ஓபிஎஸ் ஆசைகாட்டி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தீர்ப்பு எப்படி வந்தாலும் கண்டிப்பாக சேலத்தில் ஒரு கேங்க் ஓபிஎஸ் பக்கம் செல்லும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தீர்ப்பு பற்றி கவலையில்லை.. சேலத்தில் சிலர் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் கண்டிப்பாக ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவ வாய்ப்பு உள்ளது என்று என்கிறார்கள் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

    English summary
    What is O Panneerselvam plan against Edappadi Palanisamy? What will happen in Salem?அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்கிறார்கள்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X